ஜோலியின் குலை நடுங்கும் கொலைகள்... வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து.. ஒத்திகை பார்த்த கொடூரம்
வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து கொன்றாரா ஜோலி விசாரணை நடக்கிறது
Recommended Video
திருவனந்தபுரம்: ஆசை ஆசையாக வளர்த்த, தன்னுடைய செல்லமான நாய்க்கு சயனைடு கொடுத்து.. கொலைக்கான ஒத்திகை பார்த்துள்ளார் கேரளத்து கில்லர் ஜோலி!
சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றவர் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி விசாரணையில் உள்ளார்.

மாமனாருக்கு காபியில் விஷம்... மாமியாருக்கு சூப்பில் விஷம்.. குழந்தைக்கு சாப்பிடும் பிரட்டில் விஷம்.. என சயனைடு கலந்து கொடுத்து சாகடித்துள்ளார். இவர்கள் எல்லாருமே ஜோலியை நம்பி அவர் தந்த சாப்பாட்டை சாப்பிட்டே செத்து போயுள்ளனர். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருந்திருக்கிறார்.
விஷத்தை கையில் எடுத்து உணவில் கலப்பதற்கு முன்பு கையில் சிறு கீறல் கூட இல்லாமல் கவனமாக இருந்துள்ளார் ஜோலி. காரணம், காயத்தின் வழியாக அவரது உடலுக்குள் விஷம் ஏறி விடக் கூடாது என்பதற்காகவாம். சொத்துக்காக இந்த கொலைகளை செய்ததாக சொல்லும் ஜோலி மற்றும் மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.
இதில், ஜோலிக்கு உதவியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் நிர்வாகியான மனோஜ்குமார் என்பவரும் சமீபத்தில் கைதானார். கொலை செய்த விதம் குறித்து ஜோலியிடம் விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பகீர் பகீர் தகவலை ஜோலி சொல்லி வருகிறார். அப்போதுதான் அவருக்கு நிறைய அபார்ஷன்கள் நடந்தது, 3-வது கல்யாணத்துக்கு ஏற்பாடு, போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் வெளியாகின.
இப்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜோலி ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.. செல்லமாக தான் வளர்த்த நாயை ஜோலியே கொன்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நாய்க்குதான் சயனைடு கொடுத்து கொலைக்கான ஒத்திகையை ஜோலி பார்த்துள்ளாராம்.. நாய்க்கு வெறி புடிச்சு போச்சு.. அதனால்தான் விஷம் வெச்சு கொன்றேன் என்று ஜோலி காரணம் சொல்கிறார்.
அதனால் அந்த நாயை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால் , ஜோலியை அழைத்து சென்று நாயை எங்கே புதைத்தார் என்று அடையாளம் காட்ட செய்தனர். அதன்படி அந்த நாயையும் தோண்டி எடுத்த போலீசார், அதை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இப்போது இந்த நாயின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் ஜோலியின் அடுத்த வண்டவாளம் வெளியே வரும் என்கிறார்கள்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications