ஷாரோன் ராஜ் கொலை.. "கூகுள்" தேடல் காரணமாக வசமாக சிக்கிய காதலி கிரீஷ்மா! மரண தண்டனைக்கு இதுவே காரணம்
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கில், கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் நேரில் பார்த்த சாட்சியம் எதுவும் இல்லை என்ற போதிலும் சூழ்நிலை ஆதாரங்கள், அதிலும் குறிப்பாக டிஜிட்டில் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் அந்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை உத்தரவிட்டிருந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரது காதலி கிரீஷ்மா என்பவரே விஷம் கொடுத்து கொலை செய்தார். காதலனை வீட்டிற்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

ஷாரோன் ராஜ் கொலை
வீட்டில் வேறு ஒருவருடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், எங்குத் தனது காதலன் ஒன்றாக எடுத்த போட்டோக்களை காட்டி மிரட்டுவாரோ என அஞ்சிய கிரீஷ்மா தனது காதலனைக் கொலை செய்துள்ளார். இதில் தான் நீதிபதி கிரீஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை கொடுத்துள்ளது. இந்த வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கூகுள் தேடல்:
இளைஞர் உயிரிழந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி 22 வயதான கிரீஷ்மா தனது ரெட்மி ஃபோனில் சில விஷயங்களைக் கூகுள் செய்துள்ளார். அதாவது கூகுள் டிரைவில் டேட்டாவை பேக் அப் செய்வது எப்படி, கூகுள் டிரைவில் பேக்அப் செய்த வாட்ஸ்அப் மெசேஜ்களை பார்ப்பது எப்படி, பேக்அப் செய்த வாட்ஸ்அப் மெசேஜ்களை டெலிட் செய்வது எப்படி என சில விஷயங்களை அவர் கூகுள் செய்துள்ளார்.
பேக்அப் டேட்டாவை டெலிட் செய்வதன் மூலம் குற்றத்தில் இருந்து தப்பிக்க கிரீஷ்மா திட்டம் போட்டிருந்தார். ஆனால், இந்த கூகுள் சேர்ச் தான் ஒரு நாள் ஷாரோனை கொன்றதற்கான தண்டனைக்கு தனக்குப் பெற்றுத் தரப் போகிறது என்பதை கிரீஷ்மா அப்போது அறிந்திருக்கவில்லை.
நீதிபதி சொல்வது என்ன:
இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 30ம் தேதி போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செல்போனை வாங்கிய போலீசார், அதை ஆய்வு செய்த போது தான் இந்த தகவல்கள் தெரிய வந்தது. இந்த கூகுள் தேடல்களே கிரீஷ்மா மரண தண்டனை பெற முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம் கேரளாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளம் பெண்ணாக கிரீஷ்மா உள்ளார். கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அளித்த தீர்பிலும் இந்த டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது தீர்பில் மேலும் கூறுகையில், "பழங்காலத்தில் ஒருவர் கல்லை எடுத்து எரிவதற்கு முன்பு தேவையான தயாரிப்பைச் செய்வார். அதேபோலத் தான் இந்த நவீனக் காலத்தில் ஒருவரின் ஆன்லைன் தேடல்கள் மற்றும் டிஜிட்டல் ஃபுட் பிரிண்ட் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவர் இணையத்தில் ஒரு கார் மாடல் குறித்துத் தேடினால் அவருக்கு அதில் ஆர்வம் இருக்கிறது என அர்த்தம். அதேபோல ஒருவருக்கு எப்படி விஷம் கொடுக்கலாம் என ஒருவர் தேடுகிறார் என்றால் என்றால் கொலைக் குற்றத்தைச் செய்ய அவர் தயாராகிறார் என்பதையே இது உணர்த்துகிறது" என்று குறிப்பிட்டார்.
டிஜிட்டல் ஆதாரம்
இந்த வழக்கில் நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்ற போதிலும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் தேடல்களை ஆதாரமாகக் கொண்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிளவுட்டில் இருந்த கடவுள் தான் (சேமிக்கப்பட்ட) டேட்டா மூலம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அவர் இணையத்தில் என்னவெல்லாம் தேடினார் என்பது கூகுள் கணக்கில் பேக்அப் ஆகி இருந்தது. அவர் எந்தெந்த தளங்களுக்குச் சென்றார் என்பதை போலீசார் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தனர்.
தொடர் முயற்சி:
கடந்த 2022 ஆகஸ்ட் 22ம் தேதியே முதலே க்ரீஷ்மா தனது காதலனைக் கொலை செய்ய முயன்றுள்ளார். அன்று காலை 5:34 முதல் 7:07 வரை சில மருந்துகளை அதிகமாகக் கொடுப்பதன் மூலம் எப்படி கொலை செய்யலாம் என்பதைக் கூகுள் செய்துள்ளார். அந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர் இதுபோல 23 முறை தேடியுள்ளார். அதே நாளில் தனது காதலன் ஷாரோனுக்கு அவர் விஷம் கலந்த ஸ்லைஸ் ஜூஸை கொடுத்துள்ளார். ஆனால், அது கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்கவில்லை.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி வேறு ஒரு மருந்து குறித்து கூகுளில் தேடியுள்ளார். ஜப்பான், பிரிட்டன், அமெரிக்க நாடுகளில் கடந்த காலங்களில் இந்த மருந்தை வைத்து எப்படி கொலைகள் நடந்துள்ளது என்பதையும் அவர் தேடியுள்ளார். இதைத் தேடிப் படித்த 20ஆவது நிமிடம் வீட்டிற்கு வரும்படி ஷாரோனுக்கு மெசேஜ் செய்துள்ளார்.
அப்போது தான் அந்த குறிப்பிட்ட விஷம் கலந்த கஷாயத்தை அவர் தனது காதலனுக்குக் கொடுத்துக் குடிக்கச் சொல்லியுள்ளார். அதைக் குடித்தது முதலே ஷாரோன் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்தார். மருத்துவமனையில் அட்மிட் ஆன போதிலும் சிகிச்சை பலனில்லாமல் அக்டோபர் 25ம் தேதி அவர் உயிரிழந்தார்.
பேக்அப் மெசேஜ்:
இடைப்பட்ட நாட்களில் விஷம் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள க்ரீஷ்மா தனது காதலன் ஷாரோனுக்கு மெசேஜ் செய்துள்ளார். மேலும், அதன் பிறகு பல முறை மன்னிப்பு கேட்கும் வகையிலும் மெசேஜ் செய்துள்ளார். அக்டோபர் 25ம் தேதி ஷாரோன் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தே பேக்அப் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி டெலிட் செய்வது என்பதைக் கூகுள் செய்துள்ளார். இவை அனைத்தையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications