பூனையை பச்சையாக அப்படியே சாப்பிட்ட நபர்.. 5 நாட்களாக சாப்பிடாததால் விபரீத முடிவு! அதிர்ந்துபோன கேரளா
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் பூனையின் இறைச்சியை ஒருவர் அப்படியே பச்சையாகச் சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக வேலைக்காக வடமாநிலங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் தென்மாநிலங்களுக்குப் பல ஆயிரம் பேர் வருகிறார்கள். அவர்களுக்கு இங்கே நல்ல சம்பளத்தில் வேலை, தங்குமிடம் என அனைத்தும் கிடைக்கிறது.

ஆனால், ஒரு சிலர் கையில் காசும் இங்குச் சரியான வேலையும் கிடைக்காமல் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பூனை இறைச்சி: அங்குப் பல நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்த ஒருவர் பூனையின் இறைச்சியை அப்படியே பச்சையாக உட்கொண்ட சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது. அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வடக்கு கேரளாவில் உள்ள குட்டிப்புரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குட்டிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை அரங்கேறியுள்ளது. 27 வயதான அந்த நபர் அசாமில் உள்ள துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர். பேருந்து நிலையத்தின் படிக்கட்டில் அமர்ந்து இறந்த பூனையின் இறைச்சியைப் பச்சையாகச் சாப்பிடுவதை உள்ளூர் மக்கள் பார்த்தாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரி விளக்கம்: அந்த அதிகாரி இது தொடர்பாக மேலும் கூறுகையில், "இது குறித்து தகவல் கிடைத்ததும்.. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அந்த நபரைப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர் கடந்த ஐந்து நாட்களாக உணவு எதையும் சாப்பிடவில்லை என்றார்.. இதையடுத்து நாங்கள் அவருக்குச் சாப்பிட உணவு வாங்கிக்கொடுத்தோம். அவரும் எந்த தயக்கமும் இல்லாமல் அதை வாங்கி சாப்பிட்டார்.
பிறகு கொஞ்ச நேரத்தில் திடீரென அவர் அங்கிருந்து மாயமானார். நாங்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடினோம். ஆனால், அவரை எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதற்கிடையே அவர் உள்ளூர் ரயில் நிலையத்தில் இருப்பதாக இன்று காலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் உடனடியாக அங்கே சென்று அவரை பிடித்து விசாரித்தோம். அப்போது தான் அவர் யார், எங்கிருந்து வந்தார் உள்ளிட்ட தகவல்கள் கிடைத்தன" என்றார்.
யார் அவர்: அவர் வடகிழக்கு மாநிலமான அசாமில் கல்லூரியில் படித்து வந்த மாணவர் என்பதும் குடும்பத்திற்கு எதுவும் சொல்லாமல் கடந்த டிசம்பர் மாதம் ரயில் மூலம் கேரளா வந்ததும் தெரிய வந்தது. விசாரணையின் போது அந்த நபர் சென்னையில் வேலை பார்க்கும் தனது அண்ணனின் மொபைல் நம்பரை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அவரைத் தொடர்புகொண்ட போது தான் அசாம் இளைஞர் சொன்ன அனைத்து தகவல்களும் உண்மை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக அவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினரை நேரில் வரச் சொல்லி இருப்பதாகத் தெரிவித்த போலீசார், அவர்களிடம் இந்த இளைஞரை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications