நடுக்காட்டில் சிறுமியை சீரழித்த மந்திரவாதி.. சூனியம் எடுப்பதாக கூறி அக்கிரமம்.. அதிரடி கைது!
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்: சூனியம் எடுப்பதாக சொல்லி, காட்டு பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார் மந்திரவாதி ரூபேஷ்.. இப்போது ஜெயிலுக்குள்ள கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார் இந்த மந்திரவாதி!
திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு மலைவாழ் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அடிக்கடி தலைவலி வந்து கொண்டே இருக்கவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார் அந்த சிறுமியின் தந்தை. ஆனால் தலைவலி சரியாகவே இல்லை. கூலி தொழிலாளி என்பதால், மகளை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கவனிக்கவும் முடியவில்லை.

இதனிடையே, மகளின் தலைவலிக்கு வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ என்று பயந்த தந்தை அந்த ஊரில் உள்ள ரூபேஷ் என்பவரை சந்தித்து பேசினார். ரூபேஷ் ஒரு மந்திரவாதி.. பில்லி, சூனியம் எடுப்பவர் என்று ஊருக்குள் சொல்லி வருவதாலேயே, இவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. ரூபேஷுக்கு வயது 35!
மகளின் நோய் குறித்து காரணம் கேட்ட தந்தையிடம், சிறுமிக்கு சூனியம் இருப்பதாகவும், அதை முதல்ல எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
உடனே தந்தை மகளை அழைத்துக் கொண்டு ரூபேசை சந்திக்க சென்றார். அப்போது ரூபேஷ், சிறுமியை பார்த்தவுடன், தனி இடத்தில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு யாருமில்லாத இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரவும் சிறுமி அலறி கத்தி உள்ளார்.
இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்று, ரூபேஷை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ரூபேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து போக்சோவில் கைது செய்து, கோர்ட்டில் ஒப்படைத்து ஜெயிலில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications