வெடிக்கும் சபரிமலை தங்க திருட்டு.. சுரேஷ் கோபியிடம் விசாரணை.. அடுத்து மோகன்லாலிடம் செல்லும் போலீஸ்
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர், அடுத்த கட்டமாக மோகன் லாலிடமும் விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ல் கேரளா ஐயப்பன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்தது. அப்போது கருவறை அருகே உள்ள துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் உள்ள தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்டன. இருப்பினும், இதில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

தங்கம் திருட்டு
குறிப்பாகத் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் மாயமானதாகவும் சுமார் 4 கிலோ தங்கம் திருட்டு போனதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நிதி முறைகேடு புகார்கள் குறித்து விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தனியாக விசாரித்து வருகிறது.
சுரேஷ் கோபி
2017ல் நிறுவப்பட்ட தங்கத் தகடுகள் திருடப்பட்டது என்பதே புகாராகும். இதனால் 2017ல் தங்கத் தகடுகளை நிறுவும்போது தங்கம், பணம் நன்கொடையாக அளித்த நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதன்படி நன்கொடை அளித்த 27 நபர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதேநேரம் இது முழு விசாரணை இல்லை என்றும் அவர் நன்கொடை கொடுத்த நபர்களில் ஒருவர் மட்டுமே என்பதால் அவரது வாக்குமூலத்தை மட்டுமே பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோகன்லால்
அதாவது கடந்த 2017ல் தங்கத் தகடுகளை மாற்ற நன்கொடை அளித்த அனைவரது வாக்குமூலத்தையும் பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுவரை, 20 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இப்போது நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி வாக்குமூலம் பெறப்படும் நிலையில், அடுத்த கட்டமாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம் பெறவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, இயக்குநர்கள் ஷாஜி கைலாஷ், ரஞ்சி பணிக்கர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன. நன்கொடை அளித்த 27 பேரில் சுமார் 12 பேர் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தொழிலதிபர்கள் ஆவர்.
அடுத்து என்ன
சபரிமலையில் தங்கத்தை மாற்ற நன்கொடைகள் மூலம் மொத்தம் 9,573.010 கிராம் தங்கம் கிடைத்தது. ஆனால் 9,340.2 கிராம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முரண்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி கண்டறிந்ததால், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு விஜிலென்ஸ் குழு விசாரித்து வருகிறது.
அனைத்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்ட பிறகே முறைகேடு உண்மையா என காவல்துறை சரிபார்க்கும். அதாவது அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு, எவ்வளவு தங்கம் பயன்படுத்தப்பட்டுத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வார்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்து மோசடி உறுதி செய்யப்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் ஆவணங்களில் யார் நன்கொடை அளித்தனர்? எவ்வளவு நன்கொடை அளித்தனர் என்ற விவரங்கள் இல்லை. இதன் காரணமாகவே அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications