திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாட்டரி முதல் பரிசு ரூ.25 கோடி.. மெகா ஓணம் பம்பர் ஆஃபர்.. சர்ப்ரைஸ் தந்த கேரளா.. செம எதிர்பார்ப்பு

ஓணம் பண்டிகையை ஒட்டி 25 கோடிக்கு லாட்டரி பரிசு அறிவித்துள்ளது கேரள அரசு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வருகின்ற ஓணம் பண்டிகையினை முன்னிட்டு லாட்டரி ஆஃபராக 25 கோடி ரூபாயை கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இதன்காரணமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது...

அம்மாநில அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது... அதனால்தான், வாரம் முழுக்க லாட்டரி சீட்டு குலுக்கல் இங்கு நடைபெறும்..

இந்தியர்களை அழைக்கும் அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 400 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு! இந்தியர்களை அழைக்கும் அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 400 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு!

 லாட்டரி குலுக்கல்

லாட்டரி குலுக்கல்

இதுபோக, பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது.. அந்த வகையில், ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல்கள் என விதவிதமான ஆஃபர்கள் உள்ளன. கடந்த வருடமும் இப்படித்தான், ஓணம் லாட்டரி 12 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. டிஇ 645465 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூபாய் 12 கோடி என அறிவிக்கப்பட்டது.

 ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

ஆனால், அந்த லாட்டரி சீட்டுக்கு சொந்தம் கொண்டாடி சில மணிநேரங்கள் யாரும் வராததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, இறுதியில் ஆட்டோ ஓட்டுனரிடம் அந்த 12 கோடி பரிசு பணம் ஒப்படைக்கப்பட்டது.. அதேபோல, கேரளா விஷு புத்தாண்டு பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. குலுக்கலில் 10 கோடி ரூபாய்க்கான பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை வைத்திருப்பவர் பரிசு அறிவித்து பல நாட்கள் ஆகியும் அதனைப் பெற யாருமே வரவில்லை.

 ஓணம் பம்பர்

ஓணம் பம்பர்

இந்தச் செய்தியும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் அந்த லாட்டரி டிக்கெட் வாங்கிய பிரதீப் என்ற நபர், தாமதமாக வந்து பரிசை பெற்று சென்றார்.. பரிசு விபரம் தங்களுக்கு தாமதமாகவே தெரிய வந்தது என்றும் திருவிழா, உறவினர் ஒருவரின் மரணம் எனப் பல காரணங்களால் இன்று தான் வர முடிந்தது எனவும் காரணம் தெரிவித்திருந்தார். இப்போது, இந்த ஆண்டுக்கான ஓணம் பம்பர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிகபட்ச தொகையாக முதல் பரிசு ரூ.12 கோடி என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் பரிசு தொகையை ரூ.25 கோடியாக உயர்த்த லாட்டரி இயக்குனரகம், கேரள அரசுக்கு சிபாரிசு செய்தது.

 கமிஷன் - வரிகள்

கமிஷன் - வரிகள்

இதற்கு மாநில அரசும் அனுமதி அளித்தது... அதைத் தொடர்ந்து வருகின்ற ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு சீட்டு வருகிற 18-ந் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது... இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கேரள மாநிலத்தில் ஏற்படுத்தி வருகிறது.. பரிசு தொகை அதிகமானால், லாட்டரி விற்பனை செய்த ஏஜென்சிக்கு கமிஷன், வரிகள் என அனைத்தும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
surprise announcement by kerala government and 25 crores as onam offer for lottery ஓணம் பண்டிகையை ஒட்டி 25 கோடிக்கு லாட்டரி பரிசு அறிவித்துள்ளது கேரள அரசு
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X