பின்வாங்க மாட்டேன்.. என்னை கொன்றுவிடுங்கள்.. எல்லா உண்மைகளும் மூடப்படும்- ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர்
திருவனந்தபுரம்: என்னை கொன்று விடுங்கள். அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என தங்கக் கடத்தல் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர் விட்டுள்ளார்.
Recommended Video
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகாரை பினராயி மறுத்துள்ளார். மேலும் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தங்கம் கடத்தல்
இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வழக்கறிஞர் ஆர் கிருஷ்ணராஜ் ஆஜராகி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு வெளியிட்டதாக தெரிகிறது. இது குறித்து வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை
இதையடுத்து ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் கிருஷ்ணராஜ் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வப்னா சுரேஷ் பாலக்காட்டில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவர் மீதும் நான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளேன்.

ரகசிய வாக்குமூலம்
அவ்வாறு ரகசிய வாக்குமூலத்தின் போது நான் அவர்கள் மீது கூறிய புகார்களிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை குறி வைத்து காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என பத்திரிகையாளர் ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அதே போல் நடந்தது.
|
குறி வைத்து தாக்குதல்
என்னுடைய வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யும் என்றும் கிரண் கூறியிருந்தார். அதுவும் நடந்தது. என்னை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னை கொன்றுவிடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என கண்ணீர் விட்டு ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications