பேச்சை கேட்கல! ஸ்டாலினின் கேரள மீட்டில் நடந்த "சம்பவம்".. வெடித்த மோதல்! டாப் புள்ளிக்கு டெல்லி குறி
திருவானந்தபுரம்: நேற்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட சிபிஎம் மாநாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று கேரள அரசியலை உலுக்கி உள்ளது. அது என்ன சம்பவம்.. ஏன் கேரள அரசியல் இதனால் சூடாக இருக்கிறது என்று பார்க்கலாம்!
கேரளாவில் இருக்கும் கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று அந்த விழாவில் கலந்துகொண்டு நீண்ட நேரம் உரையாற்றினார்.
மாநில மத்திய அரசின் உறவு மற்றும் உரிமைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இதில் பேசினார். இதில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை புகழந்து பேசினார்.

கலந்து கொண்டார்
இந்த நிகழ்வில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேவி தாமஸ் கலந்து கொண்டார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் தமிழ்நாடு போல கிடையாது. அங்கு காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகள் பரம எதிரிகள். இரண்டு கட்சிகளும் பிரதான எதிர் எதிர் துருவங்கள். இந்த நிலையில்தான் நேற்று சிபிஎம் மாநாட்டில் காங்கிரசின் கேவி தாமஸ் கலந்து கொண்டார். இது அரசு நிகழ்வு என்றால் பிரச்சனை இல்லை.

பங்கேற்க கூடாது
ஆனால் இது கட்சி சார்ந்த நிகழ்வு. இது சிபிஎம் மாநாடு. அரசு நிகழ்வு ஒன்றில் கேவி தாமஸ் கலந்து கொள்கிறார் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் இவர் சிபிஎம் கட்சியின் நிகழ்வில் கலந்து கொண்டார். இதுதான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக மாநாடு ஒன்றில் அதிமுகவின் டாப் தலை கலந்து கொண்டால் எப்படி இருக்கும். அப்படித்தான் இதுவும். இந்த நிகழ்வில் கேவி தாமஸ் கலந்து கொள்ள கூடாது என்று ஏற்கனவே கேரள காங்கிரஸ் அவருக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

நான் செல்வேன்
ஆனால் கேவி தாமஸ்.. நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். இந்த நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். நான் கலந்து கொள்வதில் என்ன தவறு? இது அரசியல் நிகழ்வு கிடையாது. முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணியில் தானே இருக்கிறார். அதனால் நான் கலந்து கொள்வது தவறு கிடையாது என்று தனது முடிவை நியாயப்படுத்தி இருந்தார். அதோடு நேற்று நடந்த நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

நெருக்கம் காட்டினார்
நேற்று சிபிஎம் தலைவர்களோடு நெருக்கம் காட்டிய கேவி தாமஸ்.. முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி இருந்தார். அதில் விஜயன் சிறப்பாக செயல்படுகிறார். அவரின் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்தியாவின் சிறந்த முதல்வர்களின் ஒருவராக அவர் திகழ்கிறார். அவரின் கெயில் பைப்லைன் திட்டம் தொடங்கி பல திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன, என்று அவர் குறிப்பிட்டார்.

பாராட்டினார்
காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறி கூட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமின்றி.. அந்த நிகழ்ச்சியில் பினராயி விஜயனையும் இவர் பாராட்டியது காங்கிரஸ் தரப்பை கொதிக்க செய்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமை இவரின் செயலை கவனிக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக டெல்லிக்கு புகார் சென்றுள்ள நிலையில், கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் இது பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில்,. தாமஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறி சிபிஎம் நிகழ்விற்கு சென்றுள்ளார்.அவர் பாதை மாறி செல்கிறார்.

முதல்வர் ஒப்பந்தம்
முதல்வர் விஜயனோடு அவர் ஒப்பந்தம் செய்துவிட்டார் போல. அவர் கட்சியில் இருந்து விலக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று சொல்லியும் கேட்கவில்லை. டெல்லிக்கு அவரை பற்றி புகார் அனுப்பி இருக்கிறோம். டெல்லி காங்கிரஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும். அவர் முதல்வர் விஜயனோடு எதோ கூட்டு வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது, என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications