கைவிட்டு போன திருவனந்தபுரம்.. சசிதரூர் கூட ஒரு காரணம்தான்! அதிருப்தியில் காங்கிரஸ்
திருவனந்தபுரம்: வழக்கமாக கேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைந்தால், அந்த இடத்தை காங்கிரஸ்தான் பிடிக்கும். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக தற்போது பாஜக அந்த இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு சசிதரூர் கூட ஒரு காரணம்தான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீப காலமாக பாஜகவுடன் சசிதரூர் அதீத நெருக்கம் காட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாராட்டி, மத்திய அரசை சசிதரூர் மிகப்பெருமையாக பேசியிருந்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் பதிலடி தொடர்பான விஷயங்களில் அரசு எடுக்கும் நிலைப்பாட்டுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சசிதரூர் தனது ஆதரவு குறித்து நியாயம் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் உட்பட, கட்சியின் தலைவர்கள் பலர் சசிதரூரை கடுமையாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சசிதரூரை பாராட்டி இருந்தார்.
அதேபோல, சசிதரூர் பல்வேறு தருணங்களில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, அவரை பாராட்டி பேசி இருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி மீதும் பாஜக மீதும், காங்கிரஸ் கடுமையாக விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருப்பதாக சசிதரூர் பாராட்டி வந்தார்.
அதேபோல ப்ராஜெக்ட் சிண்டிகேட் என்கிற சர்வதேச ஊடகத்திற்காக அவர் எழுதிய கட்டுரையில், வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி மேலோட்டமாக சொன்னால் கூட பரவாயில்லை, நேரு, காந்தி குடும்பம் உட்பட பல காங்கிரஸ் குடும்பங்களை குறிப்பிட்டு அவர் விமர்சித்திருந்ததால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. மறுபுறம் சசிதரூருக்கு சப்போர்ட் செய்து, அவரின் விமர்சனத்தை பாஜக வரவேற்று இருந்தது.
இதற்கெல்லாம் உச்சமாக, 1975-77 எமர்ஜென்சி காலத்தை இரண்டு காலம் என்று சசிதரூர் கூறியிருந்தார். வழக்கமாக பாஜகதான் இந்த விமர்சனத்தை முன்வைக்கும். ஆனால், பாஜகவின் குரலாக சசிதரூர் இவ்வாறு பேசியிருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுத்தன. ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை புறக்கணிப்பது, மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்றவை சசிதரூருக்கு எதிரான வலுவான குற்றச்சாட்டாக இருக்கிறது.
இப்படி இருக்கையில், திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றி காங்கிரசை சுய பரிசீலனைக்கு தள்ளி இருக்கிறது. சசிதரூரின் நடவடிக்கைகள் இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று காங்கிரஸ் நிச்சயம் கூறும். இப்படி ஒரு சூழல் வரும் நிலையில், சசிதரூர் பாஜகவுக்கு கட்சி தவலாம். இப்படி கட்சி தாவுவதால் அடுத்த மக்களவை தேர்தலுக்கு போட்டியிட பாஜக சசிதரூருக்கு வாய்ப்பு வழங்கும். அல்லது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புகளை வழங்கலாம்.
சுருக்கமாக கூறுவதெனில், திருவனந்தபுரம் எம்பியாக இருந்துக்கொண்டு, காங்கிரஸ் வெற்றிப்பெற உள்ளாட்சி தேர்தலில் சசிதரூர் போதிய வேலை செய்யவில்லை. இதனால் இடதுசாரிகளும், காங்கிரஸும் ஒன்றுதான் என்று மக்கள் நம்பினர். இதுவே பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக மாறியது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications