47 வயது நபர் பலி.. கேரளாவில் பரவும் ”வெஸ்ட் நைல் வைரஸ்”! அறிகுறிகள் என்ன? முழு தகவல்கள் இதோ!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் மிக வேகமாக பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு காரணமாக 47 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் நோய் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Recommended Video
2019ஆம் ஆண்டில் மலப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் முதன்முதலாக வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இந்த வைரஸ் முதன்முதலாக 2006ஆம் ஆண்டில் ஆழப்புழாவில் பதிவானது. பின்னர், 2011ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் பதிவானது.
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், வெஸ்ட் நைல் வைரஸ் அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில் கேரள மாநிலத்தில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பு காரணமாக 47 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வைரஸால் மரணம்
கேரளத்தின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவருக்கு கடந்த 17-ம் தேதி, காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதனைத் தொடர்ந்து வீட்டு அருகாமையில் இருக்கும் பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமடையாததால் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்துபார்த்த போது, அவருக்கு மேற்கு நைல் காய்ச்சலுக்குண்டான வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் அதிர்ச்சி
இந்நிலையில் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு மிகவும் தீவிரமான நரம்பியல் நோயை உருவாக்கும். கொசு மூலம் இந்த நோய் பரவும் என்பதால் வீட்டைச் சுற்றி கொசு உற்பத்தி ஆகாதவகையில் பராமரிக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலைத் தாண்டி ஆரம்பத்தில் வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பது இதில் மிகவும் சவாலான விசயமாகப் பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு
தற்போது நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது. அதன் அறிகுறிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? செய்ய வேண்டிவை செய்ய கூடாதவை குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெஸ்ட் நைல் வைரஸ் என்பது கியூலெக்ஸ் வகையிலான கொசுக்களால் பரவும் நோய் ஆகும். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இது "ஃபிளவி" வகை வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பறவைகளிலிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

முதன்முதலில் கண்டுபிடிப்பு
1937இல், இந்த வைரஸ் உகாண்டா நாட்டின் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1953 ஆம் ஆண்டு நைல் டெல்டா பகுதியில் உள்ள பறவைகளில் அடையாளம் காணப்பட்டது. இது 1997 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பறவைகளை தாக்கும் நோய்க்கிருமியாக கருதப்படவில்லை. ஆனால் அப்போது இஸ்ரேலில் தீவிரமான திரிபு மூளையழற்சி மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகளை வழங்கும் பல்வேறு பறவை இனங்களின் இறப்பை உண்டாக்கியது.

வைரஸ் பரவ காரணம்
அதே நேரம் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. இவ்வகை வைரஸால் பாதிக்கப்பட்ட பறவையை கொசு கடிக்கும் போது, இந்த வைரஸ் கொசுவுக்குள் செல்கிறது. பின்னர் ரத்தத்தில் இருக்கும் வைரஸ், கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைந்து அந்த கொசு மனிதர் அல்லது பிற விலங்குகளை கடிக்கும் போது, வைரஸ் அவர்கள் உடலுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த வகை வைரஸ்கள் ரத்தமாற்றம் மூலமாக பரவக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோய் பரவும் வாய்ப்புகள்
அதே வேளையில் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து அவரது குழந்தைக்கும் அல்லது ஆய்வகங்களில் வைரஸின் வெளிப்பாடு மூலமாகவும் பரவலாம். பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுவதாக இதுவரை வெளியான ஆதாரங்கள் தெரிவிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய கூற்றுப்படி, பறவைகள் உட்பட பாதிக்கப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பரவாது. ஆனால், இறைச்சியை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்னென்ன?
இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. எஞ்சியிருக்கும் 20 சதவீத பேருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, சரும பாதிப்புகள், உடல் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடுமையான நோய்தொற்றுக்கு ஆளாகும்போது மூளை அழற்சி, மூளைக்காய்ச்சல், பக்கவாதம் மட்டுமின்றி மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவர், கடுமையான நோய் பாதிப்பை சந்திக்கின்றனர். அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு பல வாரங்களும் மாதங்களும் ஆகக்கூடும். மத்திய நரம்பு மண்டலத்தில் சில பாதிப்புகள் நிரந்தரமாக இருக்கலாம் என சிடிசி கூறுகிறது. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

நோயை தடுக்கும் முறை
கொசுக்கள் மூலமாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது. முதலில் கொசுக்கள் வராமல் நடவடிக்கை எடுப்பது அவசியம். வீடுகளில் ஜன்னல்களில் கொசுவலை பயன்படுத்துவது அவசியம்.வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்க விட வேண்டாம். கொசு கடிக்க முடியாத அளவு, நீண்ட சட்டைகள் பேண்ட் அணிந்துகொள்ள வேண்டும்.வீடு வளாகங்களில் குப்பைகள் சேர்வதை தடுக்க வேண்டும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications