இதெல்லாம் எப்படிங்க.. "மெடிக்கல் மிராக்கிள்.." 10 வருடமாக ஹனிமூன் கொண்டாடும் ஜோடி! நாடு நாடாக பயணம்
திருவனந்தபுரம்; கடந்த 10 ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தேனிலவு கொண்டாடி வருகின்றனர் அமெரிக்காவை சேர்ந்த மைக் ஹாவர்ட் - ஆன் தம்பதியினர்.
இருவருக்கும் உலகம் சுற்றுவதில் இருந்த ஆர்வத்தில் தொடங்கிய இந்த ஹனிமூன் பயணம் தற்போது கேரளா வரை நீண்டு வந்திருக்கிறது. இது அவர்களுக்கு 65வது நாடு.
ஏற்கெனவே உலகம் முழுவதும் 64 நாடுகளில் சுற்றுலா சென்ற பின்னர் தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர். கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களை கடந்த சில நாட்களாக கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த உலகத்தில் மனிதன் எவ்வளவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது ஆர்வமும் தேவையும்தான். சரி இது மட்டும் இருந்தால் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திவிட முடியா எனக் கேட்டால் அது நிச்சயம் முடியாத ஒன்று. இதற்கு அடுத்தபடியாக ஊர் சுற்றுதல் என்கிற சிந்தனை அவசியமாகும். என்னங்க ஏதோ உளறீங்க அப்படினு நீங்க யோசிச்சாலும் அதுதான் உண்மை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கும் மனித இனங்களை ஒரு காலத்தில் ஊர் சுற்றிகள்தான் ஒன்றினைத்தார்கள்.

யுவான்சுவாங் தொடங்கி புத்தர், யேசுநாதர், நபிகள் நாயகம் என அனைவரும் கால் போன போக்கில் பயணித்தவர்கள்தான். இவர்கள் எல்லோருமே பயணிகள்தான். மனித குழுக்களுக்கிடையேயான உறவுகளை வளர்த்தெடுக்க இவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. பழக்க வழக்கங்கள், மொழிகள், உணவு முறைகள், தானியங்கள், பயிர்கள், கால்நடைகள் என அனைத்தையும் ஒரு நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பிற்கு கொண்டு சேர்த்தவர்கள் இவர்களே. இவர்கள் பயணம் மேற்கொண்ட காலத்தில் சேகரித்த தகவல்களையே பிற்காலத்தில் கல்வியாக மக்கள் பயின்றனர்.
ஆக ஊர்சுற்றுவது ஒன்றும் பயனற்ற செயல் இல்லை. அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த மைக் ஹாவர்ட் - ஆன் தம்பதியினர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஊர் சுற்றி வருகின்றனர். சரி எல்லா பயணிகளும்தானே ஊர் சுற்றுகிறார்கள் இதில் என்ன சிறப்பு என கேட்கிறீர்களா? இந்த தம்பதியினர் ஹனிமூனை கொண்டாடிக்கொண்டே ஊர் சுற்றி வருகிறார்கள். அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக. வெயிட் ய மினிட்! இவர்கள் டூரிஸ்டா இல்ல ஹனிமூன் கப்புல்ஸா என கேட்க தோன்றுகிறதா உங்களுக்கு?
அனைவருக்கும் இதே சந்தேகம்தான். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் சுமார் 64 நாடுகளுக்கு ஹனிமூன் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அப்படியெனில் இவர்களின் பயணம் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்! இந்த பயணம் குறித்து விசாரித்தபோது பயணத்திற்காக பெரிய அளவில் திட்டம் எதுவும் தீட்டுவதில்லை என்றும் கூறியுள்ளனர். படிப்பு, அது முடித்தவுடன் மேற்படிப்பு, அது முடித்தவுடன் வேலை, அதன் பின்னர் திருமணம், குழந்தைகள், மீண்டும் குழந்தைகளின் படிப்பு என அரைத்த மாவையே அரைக்காமல் இந்த தம்பதியினர் புதிதாக இந்த ஹனிமூன் டூர் ட்ரிப்பில் இறங்கியுள்ளனர். ஒரு வேளை இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் உலகின் அத்தனை அறிவையும் தனது பெற்றோர்கள் மூலம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. யாருக்கு தெரியும் இந்த குழந்தை கூட நாளை விஞ்ஞானி ஆகலாம்.












Click it and Unblock the Notifications