கேரளாவின் பெயர் மாறுது.. இனிமேல் "கேரளம்".. மாநில அரசு எடுத்த பரபரப்பு முடிவு.. நிறைவேறிய தீர்மானம்
திருவனந்தபுரம்: 'கேரளா' என இருக்கும் தங்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மாநிலம் எனில் அது கேரளாதான். அங்கு தமிழ்நாடு மாதிரி பெரும் தொழில் வளர்ச்சி இல்லை என்றாலும் கூட, தனிமனித வருமானம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அம்மாநிலம் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு ஆட்சி மொழியாக மலையாளம் இருக்கிறது. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. மலையாளத்தில் இதற்கு 'கேரளம்' என்று பெயர்.

ஆனால் ஆங்கிலத்தில் கேரளா என்றுதான் அழைக்கப்படுகிறது. அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து இன்று அம்மாநில சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். அதன்படி இனி மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழியிலும் கேரளா கேரளம் என்றுதான் அழைக்கப்பட வேண்டும்.
இதற்கான மாற்றத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டப் பேரவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அது நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய பினராயி, "மலையாளத்தில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் நாள் மொழிவாரியாக கேரளம் பிரிக்கப்பட்டது. இதே நாளில்தான் நம் 'கேரளப்பிறவி' தினத்தை கொண்டாடுகிறோம்.

மலையாளம் பேசும் மக்களுக்கு கேரளம் தேவை. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே எங்களின் தாய்மொழி வலுவாக இருந்தது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை, 'கேரளா' என குறிப்பிடுகிறது. எனவே அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் இந்த பெயரை 'கேரளம்' என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கை தேவை" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்ற பயன்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் புதிய மாநிலங்களையோ, ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள மாநிலங்களின் எல்லைகள் மற்றும் பெயரையோ மாற்றுவது குறித்து வழிகாட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications