கேரளாவில்.. மக்களோடு மக்களாக.. ஓட்டலில் உணவு அருந்திய முதல்வர் மு.க ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் கொச்சிக்கு சென்றார். கொச்சின் திரும்பும் வழியில் வைக்கம் - எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு மக்களோடு மக்களாக அவர் சிற்றுண்டி அருந்தினார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் மகாதேவர் கோவிலை சுற்றிலும் உள்ள வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு தடைகள் இருந்தது.

இந்த தடையை நீக்கக் கோரி 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி டிகே மாதவன் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

 வைக்கம் வீரர் பெரியார்

வைக்கம் வீரர் பெரியார்

எனவே, தலைவர்கள் இல்லாமல் அந்த போராட்டம் தடுமாறியது. இதையடுத்து கேரள தலைவர்களின் அழைப்பு விடுத்ததன் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது பதவி வகித்து வந்த பெரியார் வைக்கம் சென்றார். அங்கு நடந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்று வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இதனால், வைக்கம் வீரர் என்ற பட்டமும் பெரியாருக்கு கிடைத்தது.

நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்

நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்

இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரள அரசு தரப்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கேரளா சென்றார். கேரள மாநிலம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய மு.க ஸ்டாலின், வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியாவிற்கே வழிகாட்டிய போராட்டம்

இந்தியாவிற்கே வழிகாட்டிய போராட்டம்

மார்ச் 6ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம் என்று தெரிவித்தார். வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டிய போராட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பெரியார் என்பவர் தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல மொழி மற்றும் நாடு கடந்தவர் பெரியார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 போராடி வெற்றி பெற்றனர்

போராடி வெற்றி பெற்றனர்


தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள். கேரளாவில் உள்ள தலைவர்களும் தமிழ்நாட்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்து போராடி வெற்றி பெற்றனர்" என்று பேசினார். வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் கொச்சிக்கு சென்றர்.

மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார்

மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார்

கொச்சின் திரும்பும் வழியில் வைக்கம் - எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு மக்களோடு மக்களாக அவர் சிற்றுண்டி அருந்தினார். அப்போது அங்கிருந்த மக்கள் மு.க.ஸ்டாலினை, சந்தித்து பேசினார். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினும் உற்சாகமாக கலந்துரையாடினார். தமிழக முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் அங்குள்ள சிலர் அவருடன் மகிழ்ச்சியாக செல்பியும் எடுத்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+