முல்லை பெரியாறு அணை.. சர்ச்சை கிளப்பிய மலையாள நடிகர் ப்ரித்விராஜுக்கு எதிராக திரண்ட விவசாயிகள்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மிகவும் பழமையான முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என நடிகர் ப்ரித்விராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு எதிராக விவசாயிகளும் அரசியல்வாதிகளும் திரண்டு கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறார்கள்.

Recommended Video

    நடிகர் பிரித்விராஜ் சர்ச்சைக்குரிய கருத்து… அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    முல்லைப் பெரியாறு அணை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணையாகும். இது தமிழக - கேரள எல்லையில் உள்ளது.

    1895 ஆம் ஆஆண்டு ஆங்கிலேயர்களால் 155 அடி கொள்ளளவு கொண்ட ஒரு அணையாகும். இந்த அணையை தமிழக பொதுப் பணித் துறை பராமரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    140 அடி

    140 அடி

    அதன் மூலம் அணையின் நீர் மட்டமும் 140 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அதிகபட்சமாக உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள் என கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்தான் நடிகர் ப்ரித்விராஜ் சர்ச்சைக்குரிய கருத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    முல்லை பெரியாறு அணை

    முல்லை பெரியாறு அணை

    அவர் தனது பதிவில் 125 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமே தவிர அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என பதிவிட்டிருந்தார். இதையடுத்து மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரின் ரசிகர்கள் மன்றத்தினரும் நடிகர் ப்ரித்விராஜின் கருத்தை ஆதரித்து அணையை இடிக்க வேண்டும் என பதிவு செய்தனர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இதே போல் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினரும் இதே கருத்தை எடுத்து வைத்து பதிவிட்டு வந்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியல்வாதிகளும் விவசாயிகளும் நடிகர் ப்ரித்விராஜின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்சிட்டிவான விஷயங்களில் நடிகர்கள் இது போல் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

    முல்லை பெரியாறு அணை

    முல்லை பெரியாறு அணை

    மேலும் மற்ற நடிகர்களும் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக அவர்களது ரசிகர்கள் பதிவிட்ட கருத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ப்ரித்விராஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் அளித்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+