உன்னை பலாத்காரம் செய்ய ஆசையாக இருக்கு.. திருநங்கையையும் விடாத காங்கிரஸ் எம்எல்ஏ! பெரிதாகும் பிரச்சனை
திருவனந்தபுரம்: மலையாள நடிகையான ரினி அன் ஜார்ஜ், தன்னை அரசியல்வாதி ஒருவர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்ததாக கூறினார். இதையடுத்து பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தன்னையும் விட்டு வைக்கவில்லை என்று திருநங்கை ஒருவர் தெரிவித்து இருப்பது கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் மாடலாகவும், பத்திரிகையாளராக இருந்தவர் ரினி அன் ஜார்ஜ். இவர் தற்போது நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசியல்வாதி ஒருவர் தன்னை ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்ததாகவும், அதுபற்றி மேலிட தலைவர்களிடம் புகார் அளிப்பதாக கூறியும் அவர் அஞ்சவில்லை என்று கூறினார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த அரசியல்வாதி யார்? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த விஷயத்தில் பாஜகவினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தான் அந்த நபர் எனக்கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர்.
அதுமட்டுமின்றி ராகுல் மம்கூத்தின் எம்எல்ஏ அலுவலகம் நோக்கி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். ராகுல் மம்கூத்தில் காங்கிரஸ் கட்சியில் வளர்ந்து வரும் தலைவராக உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில இளைஞர் அணியின் தலைவராக இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து அவர் கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் ராகுல் மம்கூத்ததில் மீது புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர் கட்சி நிர்வாகிகளின் மனைவி, மகள்களிடம் தவறான நோக்கத்தில் பேசியிருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அதேபால் எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும், காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தனக்கு அடிக்கடி மெசேஜ் செய்து சைக்கோ போல் செயல்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது திருநங்கை ஒருவரிடமும் தவறாக பேசி உள்ளார். அந்த திருநங்கையின் பெயர் அவந்திகா. தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றபோது அவந்திகா மற்றும் ராகுல் மம்கூத்ததில் இடையே பழக்கம் அறிமுகம் ஏற்பட்டது. இது நட்பாக மாறியது. இந்த நட்பு தான் கடைசியில் அருவருப்பானதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி திருநங்கை அவந்திகா கூறுகையில், ‛‛ இதுதொடர்பாக அந்த திருநங்கை ஒருவர் கூறுகையில், ‛‛என்னை பலாத்காரம் செய்ய ஆசையாக இருப்பதாக ராகுல் மம்கூத்ததில் மெசேஜ் அனுப்பி இருந்தார். பெங்களூர் அல்லது ஹைதராபாத்துக்கு இருவரும் செல்லலாம்'' என்று கூறியுள்ளார். இப்படி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததிலுக்கு எதிராக புகார்கள் குவிவதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications