154 பயணிகளுடன் திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற விமானம்- திருவனந்தபுரத்தில் திடீரென தரை இறக்கம்!
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி 154 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென கேரளாவின் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. 154 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று முற்பகல் 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்டன. இந்த விமானத்தில் மொத்தம் 154 பயணிகள் இருந்தனர்.
திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி சென்ற இந்த பயணிகள் விமானத்தில் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து பகல் 12 மணியளவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 154 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் அவசரம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இவ்விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் நலமுடன் இருக்கின்றனர் என திருவனந்தபுர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications