'இந்து ஐஏஎஸ் அதிகாரிகள்' வாட்ஸ்அப் குரூப்.. சர்ச்சையில் சிக்கிய 2 ஐஏஎஸ் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி உட்பட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதம் மற்றும் ஜாதி ரீதியான எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி. ஆனால், தீபாவளி சமயத்தில் கேரளத்தில் ஐஏஎஸ் இந்து அதிகாரிகள் என்ற வாட்ஸ் அப் குரூப் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரை பல இந்து அதிகாரிகள் இடம்பெற்றிருந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரளத்தில் தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநராக உள்ள கோபால கிருஷ்ணன் என்ற ஐஏஎஸ் அதிகாரிதான் அந்த வாட்ஸ் அப்பின் அட்மினாக உள்ளதாக பெயர் அடிபட்டது.
ஐஏஎஸ் அதிகாரியான கோபால கிருஷ்ணன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். 2013 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான கோபால கிருஷ்ணன், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராகவும் தேசிய சுகாதர திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் அதிகாரிகளே மத ரீதியாக தனி குழு அமைத்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த வாட்ஸ் அப் குழுவை தான் துவங்கவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், தன்னுடைய செல்போன் மூலம் மலையாளி இந்து அதிகாரிகள் மற்றும் மலையாளி முஸ்லீம் அதிகாரிகள் என்ற வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டு இருப்பதாக எனது நண்பர் கூறினார்.
என்னுடைய செல்போன் எண் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக பேசியிருந்த அமைச்சர் ராஜீவ், மத அடிப்படையிலான பிளவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியது.
இச்சம்பவம் குறித்து கேரள அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு என சில நடத்தை விதிகள் உள்ளன என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர்மட்ட விசராணை மேற்கொண்டது. விசாரணையில் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் ஆகிய இரண்டு அதிகாரிகளை கேரள அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications