கட்டிலில் பொம்மை.. நிஜ பாம்பை ஏவி கடிக்க செய்து...பெண் கொலையில் போலீஸாரின் சூப்பர் விசாரணை
பாம்பை ஏவி கொன்ற உத்ராவின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது
திருவனந்தபுரம்: கடந்த வருடம் நடந்த மிக கொடுமையான கொலைகளில் ஒன்றுதான் அப்பாவி பெண் உத்ராவின் மரணம்.. கேரள மாநிலத்தில் நடந்த சம்பவமாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்களையும் உறைய வைத்த பச்சை படுகொலை இது.. உத்ராவின் மரணம் தொடர்பாக வழக்கின் விசாரணை தறபோது சூடுபிடித்துள்ளது..!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. வாய் பேச முடியாதவர்.. 25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், இவர் திடீரென பாம்பு கடித்து உயிரிழந்துவிட்டார்.
உத்ராவின் குடும்பத்தினர் இது சம்பந்தமாக போலீசில் புகார் தந்து, மரணத்துக்கு காரணம் உத்ராவின் கணவர் சூரஜ்தான் என்றும், சொத்துக்காக இந்த கொலை நடந்துள்ளது என்றும் உறுதியாக அடித்து சொன்னார்கள்.

பெற்றோர்
இதையடுத்து விசாரணை ஆரம்பமானது.. அப்போது போலீசார் பல பகீர் தகவல்களை வெளிக்கொண்டு வந்தனர்.. அதாவது, கடந்த மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்துள்ளது.. அப்போது அவரை மீட்ட பெற்றோர், மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சையில் அனுமதித்தனர்.. ஒருவழியாக உத்ராவை காப்பாற்றி, தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து வந்தனர்.
அந்த வீட்டுக்கு மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார்... அவர் சென்ற அன்றே மறுபடியும் உத்ராவை பாம்பு கடித்துள்ளது.... உத்ராவின் அலறல் கேட்டு பெற்றோர் ஓடிவந்து பார்க்கும்போது, சூரஜ் அந்த பாம்பை ஒரு பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. அப்போதே அவர்மீது குடும்பத்தாருக்கு சந்தேகம் வலுத்தது...

பாம்புகள்
சூரஜ், வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருபவராம்.. உத்ராவை கொலை செய்வதற்காகவே கூகுளில் விதவிதமான பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரிடம் 10 ஆயிரம் கொடுத்து ஒரு விஷ பாம்பை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்..

பெட்ரூம்
அங்கு பெட்ரூமில் உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது... படுக்கையிலேயே துடிதுடித்து அந்த உயிர் பிரிந்துவிட்டது... ஏற்கனவே ஒருமுறை உத்ரா பிழைத்துவிட்டதால், இந்த முறை பிழைத்துவிடக்கூடாது என்பதற்காக அன்றைய தினம் இரவு உத்ராவுக்கு பாயாசம் தந்திருக்கிறார்.. பிறகு ஆப்பிள் ஜூஸும் தந்திருக்கிறார்.. இவைகள் இரண்டிலுமே தூக்கமாத்திரையை கலந்து தந்திருக்கிறார் சூரஜ்...

விசாரணை
இதை குடித்து தூங்கிவிட்டதும்தான், பாம்பை கடிக்க வைத்தாராம் சூரஜ்.. கொடிய வகை பாம்பு என்பதால், அதன் வலியும் மிக கடுமையாக இருந்திருக்கிறது.. இதற்கு பிறகு உத்ரா மீது ஏவப்பட்ட பாம்பை, எடுத்து கொண்டு போய், வீட்டுக்கு பின்பக்கம் புதைத்தார் சூரஜ்... இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த பாம்பை போலீஸார் தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டமும் செய்தனர்..

வாக்குமூலம்
முதல்முறையாக ஒரு பாம்புக்கு போஸ்ட் மார்ட்டம் நடந்தது இந்த வழக்கில்தான்.. இது எல்லாவற்றிற்கும் காரணம் வரதட்சணை பிரச்சனை மட்டுமே.. கல்யாணத்துக்கு 100 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் என வரதட்சனை தந்தபோதும், இன்னும் வரதட்சனை கேட்டு உத்ராவை சூரஜ் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.. கொலை செய்வதற்கு கொஞ்ச நாள் முன்புதான், உத்ரா பெயரில் சூரஜ் இன்சூரன்ஸ் செய்துள்ளார்... இந்த இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே உத்ராவை கொன்றுள்ளதாக போலீசில் வாக்குமூலமும் தந்தார் சூரஜ்.

சதித்திட்டம்
கொலை வழக்கில் சூரஜை கைது செய்த போலீசார், 82வது நாளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.. உத்ராவை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் சூரஜ்ஜின் தாய் மற்றும் சகோதரி மீதும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்... இப்போது இந்த கொலையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துள்ளனர் கேரளா போலீஸார்.

கோழிக்கறி
உத்ராவை போன்றே ஒரு பொம்மையை உருவாக்கி உள்ளனர்.. அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளனர்.. இதற்காகவே, கொல்லத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஒரு கட்டில் போடப்பட்டு, அந்த கட்டிலில் பொம்மையை படுக்க வைத்து, அந்த பொம்மை மீது பாம்பை போட்டுள்ளனர்.

பொம்மை
ஆனால், பாம்பை போட்டதுமே, அது பொம்மையை கடிக்கவில்லை... பிறகு பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகுதான், அந்த பொம்மையை பாம்பு 2 முறை கடித்துள்ளது. முதல் முறை 2 செ.மீ அளவும், 2வது முறை 2.4 செ.மீ. அளவும் 2.4 செ.மீ. அளவும் கடித்து இருப்பதை போலீசார் குறிப்பெடுத்து கொண்டனர்.. இப்படி ஒரு டெஸ்ட் எதற்காகவென்றால், சூரஜ் மீதான குற்றத்தை நிரூபிக்கத்தானாம்.. வழக்கமாகவே மோப்ப நாயை வைத்து போலீசார் துப்பு துலக்குவார்கள்.. முதன்முறையாக பாம்பை ஏவி பகீரத முயற்சியை எடுத்துள்ளது கேரள போலீஸ்..!
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications