சசி தரூர் மகனை வேலையை விட்டு தூக்கிய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை! சாபம் விட்ட தரூர்!
திருவனந்தபுரம்: வேலையிழப்பு என்பது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்த பின்னர், பத்திரிகை துறையில் வேலையிழப்பு அதிகரித்திருக்கிறது. அப்படித்தான் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மகனை, வாஷிங்டன் செய்தி ஊடகம் வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரூர் அந்த செய்தி ஊடகத்திற்கு அவர் சாபமிட்டிருக்கிறார்.
சர்வதேச விவகாரங்களுக்கான சிறந்த ஆய்வாளராகக் கருதப்படும் இஷான் தரூர், கடந்த 12 ஆண்டுகளாக வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாற்றி வந்தார். 2017-ல் அவர் தொடங்கிய 'WorldView' என்ற கட்டுரைத் தொடர் மற்றும் அதன் செய்தி மடல் உலக அளவில் 5 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது.

இவ்வளவு பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருந்த ஒருவரை நீக்கியது தற்கொலைக்குச் சமமான செயல் என சசி தரூர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தான் x பக்கத்தில் பதிவிட்டு இருந்த சசி தரூர், வாஷிங்டன் போஸ்டிங் இந்த வணிக ரீதியான முடிவு மிகவும் விசித்திரமானது.
இஷான் எழுதிய கட்டுரைகளை, உலக நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் அறிஞர்கள் தினமும் வாசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் ஒரு பகுதியை, வருமானம் தரும் கருவியாக மாற்றாமல் அவரை நீக்கியது அந்த நிறுவனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், இந்த நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 3ல் ஒரு பங்கு அதாவது, 300க்கும் அதிகமான பணியாளர்களை இந்த வாரம் பணி நீக்கம் செய்திருந்தது. குறிப்பாக விளையாட்டு பிரிவு மற்றும் புத்தக விமர்சன பிரிவுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச பணியாளர்கள் மற்றும் உள்ளூர் செய்தி குழுக்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டிருக்கின்றன.
நிறுவனத்தின் செயல் ஆசிரியர் மேட் முர்ரே, வாசகர்களின் விருப்பங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க இந்த துயரமான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
வாஷிங்டன் போஸ்டின் முன்னாள் ஆசிரியர் மார்டி பேரன், இந்த நாளை நிறுவனத்தின் வரலாற்றிலேயே கருப்பு நாள் என்று வர்ணித்துள்ளார். இது நிறுவனத்தின் தரத்தை மற்றும் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்றும், உண்மைத்தன்மை வாய்ந்த கள ஆய்வுகள் இனி குறைய கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications