வயநாட்டில் சொல்லியடித்த பிரியங்கா காந்தி.. முதல் தேர்தலிலேயே ராகுலை முந்தி சாதனை
வயநாடு: வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சிட்டிங் எம்பியாக இருந்த காங்கிரஸ் ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி களமிறங்கினார். களம் கண்ட முதல் தேர்தலிலேயே வயநாட்டில் தன் அண்ணன் ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் வாங்கி பிரியங்கா சாதனை படைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார்.

ராகுல் பதவி விலகியதால் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 62.92 சதவீதம் வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மூன்று கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
வயநாடு மக்களவை தொகுதியில், மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, கல்பெட்டா, திருவம்பாடி, எர்நாடு, நிலம்பூர், வண்டூர்ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். வயநாடு காங்கிரஸ் கட்சியின் கோட்டை. அந்த தொகுதியை தக்க வைப்பது காங்கிரஸ் கட்சிக்கு கௌரவ பிரச்னை.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தின் முக்கிய முகமாக பிரியங்கா காந்தியும் இருப்பதால், அங்கு மிகப்பெரிய வெற்றியுடன் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். கடந்த இரண்டு தேர்தல்களில் ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளை விட பிரியங்கா அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என வியூகம் அமைத்தனர்.
வருகிற 2026 ஆம் ஆண்டு கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சிபிஎம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ள நிலையில், ஆங்காங்கே அதிருப்தியும் எழத்தொடங்கியிருக்கிறது. அதனால் 2026 கேரளாவில் ஆட்சியமைப்பதற்கான அஸ்திவாரத்தை வயநாட்டில் இருந்து அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டார். அப்போது சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை (64 சதவீதம்) பெற்றார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி. 6.47 லட்சம் வாக்குகள் (59 சதவீதம்) வாக்குகளை பெற்றார்.
2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் ராகுலின் வாக்கு சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது. காரணம் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ராகுலுக்கு வலுவான போட்டி கொடுத்தனர். கடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி வாங்கிய வாக்கை விட பிரியங்கா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவீதம் அடிப்படையில் பிரியங்கா காந்தி 64.99 சதவீதம் வாக்குகளை பெற்றார். இது 2019, 2024 தேர்தல்களில் ராகுல் காந்தி பெற்றதை விட அதிக வாக்குகளாகும்.
பிரியங்கா காந்தி முதல்முறையாக இப்போதுதான் தேர்தலில் போட்டியிடுகிறார். முதல் தேர்தலிலேயே தன் அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்திருப்பதை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வயநாடு தொகுதியில் 7 சதவீதம் வாக்குகளை பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 13 சதவீதம் வாக்குகளை பெற்றது. தற்போது பாஜக 11 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ஆனி ராஜா 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். தற்போது கம்யூனிஸ்ட்களின் வாக்கு குறைந்து 22 சதவீதமாக உள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications