உயிரை விட்டாவது சபரிமலையை காப்பாற்றுவோம்.. கேரள பழங்குடிகள் உறுதி.. பரபரப்பு!
கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் தடுக்க உயிரை விட கூட தயார் என்று கேரளாவை சேர்ந்த பழங்குடி மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் தடுக்க உயிரை விட கூட தயார் என்று கேரளாவை சேர்ந்த பழங்குடி மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது.
அதே சமயம் கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கேரளா அரசு மறுத்துள்ளது. இது இந்துத்துவா அமைப்புகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து போராடி வருகிறார்கள்
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக மக்கள் இந்த தீர்ப்பிற்கு எதிராக போராடி வருகிறார்கள். முக்கியமாக வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். இதில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளதுதான் குறிப்பிடத்தக்கது.

பல வருடம்
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் , கேரளாவில் உள்ள பழங்குடி மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். முக்கியமாக நிலக்கல் பகுதியை சுற்றி இருக்கும் பழங்குடி மக்கள் இந்த பல வருட பாரம்பரியத்தை மாற்ற கூடாது என்று உறுதியாக உள்ளனர்.

அனுமதிக்க மாட்டோம்
என்ன நடந்தாலும் பெண்களை கோவிலுக்குள் அனுப்ப மாட்டோம் என்றுள்ளார். இந்த கோவிலுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. பெண்கள் உள்ளே நுழையும் இடத்தில் எல்லாம் நாங்கள் வந்து அமர்வோம். யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றுள்ளனர்.

உயிரை விட்டாவது காப்பாற்றுவோம்
எங்கள் காடுகளின் கடவுள் ஐயப்பன். அவரின் புனிதத்தை காக்க வேண்டும். என்ன ஆனாலும் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். நாங்கள் சாக தயாராக இருக்கிறோம். போலீஸ் வந்தாலும் எதிர்த்து நிற்போம். எங்கள் உயிரைவிட்டாவது சபரிமலையை கோவிலை காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications