லீக்கான வீடியோ.. ரெக்கார்ட் செய்யட்டுமா? ஜுஸில் விஷம் தரும் முன் காதலி சொன்ன "அந்த" வார்த்தை.. ஐயோ!
திருவனந்தபுரம்: கேரளா - தமிழ்நாடு எல்லையில் கேரளாவை சேர்ந்த காதலனுக்கு காதலி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் காதலனை காதலி ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. காதலனுக்கு அடிக்கடி ஜூஸ் வாங்கி தரும் காதலி.. கடைசியாக ஜூஸ் வாங்கி தந்த போது அதில் விஷத்தை கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதல்
கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். 23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் இவர் காதலை சொல்ல.. அவரும் காதலை ஏற்றுக்கொண்டார். கடந்த சில வருடங்களாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

கல்லூரி லவ்
இயல்பான கல்லூரி காதல் போலவே.. கல்லூரி கேண்டீனில் காதல் செய்வது, வெளியே சுற்றுவது, கிளாஸ் கட்டடித்து காதல் செய்வது என்று இவர்களின் காதல் நன்றாக சென்றுள்ளது. காதலன் ஷாரோன் ராஜ் மீது கிரீஷிமா மிகவும் அன்பாகவும் இருந்துள்ளார். இதில் கிரீஷிமா இளங்கலை முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்கவில்லை. ஆனால் ஷாரோன் ராஜ் இளங்கலை முடித்த பின்பும் மேற்கொண்டு படித்து இருக்கிறார்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் கிரீஷ்மா வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். பெரிய பணக்கார குடும்பம் ஒன்றில் இருந்து வரன் வந்திருக்கிறது. இதையடுத்து கிரீஷிமா காதலனை விட்டுவிட்டு அந்த நபரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அப்போது அந்த பெண்ணுக்கு ஜாதகம் பார்த்த போது முதல் கணவர் எப்படியும் இறந்துவிடுவார் என்று எச்சரித்து உள்ளனர்.

ஜாதகம்
இதனால் பணக்கார கணவர் இறந்து போனால் எதிர்காலம் நாசமாகிவிடும் என்று அந்த பெண், தனது காதலனையே முதலில் திருமணம் செய்துள்ளார். ஷாரோன் ராஜை தனது பெற்றோர்கள் முன்னிலையில் சம்பிரதாயத்திற்கு கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார். எப்படியும் ஷாரோன் ராஜ் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் எப்போது இறப்பார் என்று கிரீஷ்மாவிற்கு தெரியவில்லை.

மரணம்
இதனால் அவர் இறக்கும் வரை காத்திருந்து பின்னர் பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக ஷாரோன் ராஜை கொன்றுவிட்டு உடனே வசதியான மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கிரீஷ்மா முடிவு செய்துள்ளார். இதையடுத்து ஷாரோன் ராஜூக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கிரீஷ்மா கொன்றுள்ளார். பொதுவாக ஷாரோன் ராஜை சந்திக்கும் போதெல்லாம் மாம்பழ ஜூஸ் வாங்கி வருவது கிரீஷ்மா வழக்கம்.

விஷம்
இரண்டு பாட்டில் ஜூஸ் வாங்கி வந்து இவர்கள் ஒன்றாக குடிப்பது வழக்கம். அப்படித்தான் ஒருநாள் ஜூஸ் வாங்கி வந்துள்ளார். இவர்கள் ஜூஸ் குடிக்கும் முன் அதை இன்ஸடாவில் ரீல்ஸ் போடுவது வழக்கம். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளனர். அதில் கடைசி வீடியோவில் கொடுத்த ஜூஸில்தான் ஷாரோன் ராஜூக்கு அந்த பெண் விஷம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஜூஸ்
அதில் இரண்டு ஜூஸ் பாட்டில் உள்ளது. அதில் ஒன்றை கிரீஷ்மா குடிக்கிறார். இன்னொரு பாட்டிலை ஷாரோன் ராஜூக்கு கொடுத்துள்ளார். அதில்தான் கிரீஷ்மா விஷம் கலந்து உள்ளார். அப்போது அந்த வீடியோவை எப்போதும் போல இணையத்தில் வெளியிடுவதற்காக ரெக்கார்ட் செய்யட்டுமா என்று ஷாரோன் ராஜ் கேட்டுள்ளார். அதற்கு கிரீஷ்மா வேண்டாம் என்று மறுத்து உள்ளார்.

வீடியோ
என்ன விளையாண்டுக்கிட்டு இருக்க.. என்று ஷாரோன் ராஜ் கிரீஷ்மாவிடம் கிண்டலாக கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கிரீஷ்மா பதில் எதுவும் சொல்லவில்லை. இந்த வீடியோதான் கடைசியாக அவர்கள் எடுத்த வீடியோ என்று கூறப்படுகிறது. இந்த ஜுஸில்தான் விஷம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஷாரோன் ராஜ் கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது கிரீஷ்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications