கொரோனாவை விட கொடியது.. தடுப்பூசி கூட இல்லை.. கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன?
திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளா கோழிக்கோடு பகுதியை 14 வயதான சிறுவன் நிபா வைரஸ் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவை விட மிகவும் கொடியதாக அறியப்படும் இந்த நிபா வைரஸ் எப்படிப் பரவுகிறது. இதன் அறிகுறிகள் என்ன.. இதற்கான சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசால் உயிரிழந்தான். இந்த நிபா வைரஸ் ஏன் ஆபத்தானது.. இதன் அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நிபா வைரஸ்: இப்போது பரவும் நிபா வைரஸ் என்பதும் கொரோனாவை போலவே ஜூனோடிக் வைரஸ் வகையைச் சேர்ந்தது. அதாவது இதுவும் கொரோனாவை போலவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான வைரஸாகும்.. அசுத்தமான உணவு அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருப்போருக்கு இந்த நிபா வைரஸ் பரவும்..
கடந்த 1998-1999 காலகட்டத்தில் மலேசியாவில் இந்த வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வௌவால்கள், பன்றிகளில் இருந்து இது மனிதர்களுக்குப் பரவும். அதேபோல ஏற்கனவே நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்தும் கூட மற்றவர்களுக்கு இது எளிதாகப் பரவும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மறுபடியும் மொதல்ல இருந்தா? வந்தாச்சு லாக்டவுன்! அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. கதிகலங்கி நிற்கும் கேரளா!
ஆபத்து அதிகம்: காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஆகும். இது மூளையழற்சி போன்ற கடுமையான சுவாச மற்றும் நரம்பியல் பிரச்சினைகளையும் கூட ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. நிபா வைரசுக்கு உயிரிழப்பு விகிதம் அதிகம். அதாவது நிபா வைர்ஸ பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இதற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை அல்லது தடுப்பூசியும் இல்லை என்பதும் இதை ஆபத்தானதாக மாற்றுகிறது. எனவே, முடிந்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டோரைத் தனிமைப்படுத்துவதே பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். இந்த நிபா வைரஸ் என்றால் என்ன.. இது எப்படிப் பரவும்.. இதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
3 வகை பாதிப்பு: நிபா வைரஸ் பாதிப்பை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் அறிகுறிகளை ஏற்படுத்தாத தொற்றுகள், அடுத்து கடுமையான சுவாச தொற்றை ஏற்படுத்தும் பாதிப்பு, அடுத்து கொடிய மூளையழற்சி இந்த மூன்றும் தான் முக்கிய பாதிப்புகளாகும்.
வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட உடன் முதலில் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஆகியவை ஏற்படும். அதன் பின்னரே மயக்கம், தூக்கச் சிக்கல், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் மாற்றப்பட்ட உணர்வு போன்ற தீவிரமான அறிகுறிகள் ஏற்படும்.
சுவாச பிரச்சனைகள்: சிலர் நேரங்களில் கடுமையான சுவாச பிரச்சனைகள், நிமோனியா கூட ஏற்படும். அவ்வளவு ஏன் வலிப்பு, கோமா கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது. நிபா வைரஸ் நமது உடலில் பரவி 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்படும். சில அரிய நேரங்களில் 45 நாட்கள் கழித்துக் கூட அறிகுறிகள் தோன்றும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் நிபா வைரஸை தடுக்க எந்தவொரு தடுப்பூசியும் இல்லை. அதேபோல பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை என்றும் தனியாக இல்லை. இதுவும் வைரஸ் பாதிப்பை மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது.
என்ன செய்ய வேண்டும்: நிபா வைரஸ் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும் போது சில முக்கிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் நோய்வாய்ப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களிடம் இருந்து தள்ளி இருக்கவும். அடுத்து சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவவும்.. அசுத்தமாக இருக்கும் உணவுகள் மற்றும் பானங்களைக் குடிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கக் கூடாது. பாதிக்குப்பட்ட நபரின் ரத்தம் உள்ளிட்ட எந்தவொரு திரவங்களையும் கையாளக் கூடாது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications