டேய்.. எப்புட்றா! சொல்லி வைச்ச மாதிரி ஒரே நேரத்தில் பெண், அம்மா, மாமியார், பாட்டி எல்லாரும் கர்ப்பம்
திருவனந்தபுரம்: இந்த நவீனக் காலத்தில் போட்டோஷூட்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனிடையே இப்போது இணையத்தில் இப்போது போட்டோஷூட் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
நமது வாழ்க்கையின் அழகிய தருணங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க அதை போட்டோவாக எடுத்துக் கொள்வோம். இப்போதும் கூட பழைய படங்களைப் பார்க்கும் போது நம்மையே அறியாமல் நிச்சயம் ஒரு சந்தோஷம் வரவே செய்யும்.
அதிலும் பிலிம் போய் டிஜிட்டல் வந்துவிட்ட நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் புகைப்படத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஒரு சிலரால் மட்டுமே தங்கள் மகிழ்ச்சியான நினைவுகளை ஃபோட்டோக்களாக மாற்ற முடிந்தது.

போட்டோஷூட்
இப்போது இது அனைவருக்கும் சாத்தியமாகியுள்ளது. இதனால் இப்போது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். சிலர் அந்த தருணங்களை நினைவுகளாகவும், சிலர் புகைப்படங்கள் மூலமாகவும் வைத்திருக்கிறார்கள். இப்போது பர்த் டே தொடங்கி திருமண நாள் வரை அனைத்திற்கும் போட்டோ ஷூட் என்பது டிரெண்டாகவே ஆகிவிட்டது. இப்படிப் பல விதமான போட்டோஷூட்கள் பிரபலம்.

டிரெண்டிங்
அதிலும் குறிப்பாகத் திருமணங்களின் சமயத்தில் இவர்கள் செய்யும் அலப்பறைகளைத் தாங்க முடியாது. திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட், திருமண போட்டோஷூட், ஹேனிமூன் போட்டோஷூட் என்று லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். அதேபோல கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் போட்டோஷூட்களும் ரொம்பவே பிரபலம். இதுபோன்ற போட்டோஷூட்கள் சில சமயம் சர்ச்சையைக் கிளப்பினாலும் கூட, பெரும்பாலான நேரங்களில் இது மக்களின் மனங்களைக் கவரும் வகையிலேயே இருக்கிறது. அதுபோன்ற ஒரு படம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.

எப்புட்றா
இந்த போட்டோஷூட் டிரெண்டாகும் காரணமும் வித்தியாசமானது. இந்த போட்டோஷூட்டில் மருமகள் மட்டுமில்லை.. மாறாக தாய், மாமியார், பாட்டி என்று 4 பேர் இருக்கிறார்கள். முதலில் இந்த மகப்பேறு போட்டோஷூட்டை பார்த்தால், யார் கர்ப்பம் என்று கேட்பீர்கள். இதில் இளம்பெண், தாய், மாமியார், பாட்டி என்று மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 4 பெண்களுக்கும் அனைவரும் வயிற்றில் குழந்தைகளைச் சுமப்பது போல இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்றீர்களா.. வாங்க.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

உண்மை என்ன
மகள், தாய், மருமகள், பாட்டி என்று அனைவரும் கர்ப்பமாக இருப்பது போன்ற இந்தப் படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், உண்மை என்ன என்று விசாரித்தால் அப்படி 4 பேரும் எல்லாம் ஒரே நேரத்தில் கர்ப்பமாகவில்லை என்பது தெரிய வருகிறது. சும்மா போட்டோஷூட்டிற்காக இப்படி ஒரே நேரத்தில் நான்கு பேரும் கர்ப்பமாக இருப்பது போல போஸ் கொடுத்துள்ளனர். உண்மையில் அந்த பெண் மட்டுமே கர்ப்பமாக இருந்துள்ளார்.

எப்படி
மற்றவர்களும் குழந்தையைச் சுமப்பது போலவே இருக்கிறது என்று கேட்கிறீர்கள்.. பல காலமாக சினிமாக்களில் வருவதைப் போல வயிற்றில் தலையணையை வைத்துத் தான் இந்த போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்கள். இந்த வித்தியாசமான போட்டோஷூட்டிற்கான யோசனை எப்படி வந்தது என்பதும் சுவாரசியமானது. அது குறித்தும் பார்க்கலாம்.. இந்த படத்தை எடுத்ததே கர்ப்பமாக இருந்த அந்த பெண்ணின் கணவர் தான்.

வித்தியமான ஐடியா
அப்பெண் கணவர் ஜிபின் ஒரு போட்டோகிராபர். அவரது மனைவி சிஞ்சு கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், அவரது குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதையடுத்து ஜிபின் தனது மனைவிக்காகப் பிரத்தியேக மகப்பேறு போட்டோஷூட் எடுக்க முடிவு செய்தார். எப்படி வித்தியாசமாக ஒரு போட்டோஷூட்டை எடுக்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.

போட்டோ
அப்போது தான் இந்த போட்டோஷூட்டிற்கான ஐடியா அவருக்கு வந்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் தாய், பாட்டி மற்றும் மாமியார் என்று அனைவரும் கர்ப்பமாக இருப்பது போல எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். தன்னுடன் சேர்ந்து அம்மா, பாட்டி, மாமியார் என்று அனைவரும் ஃபோட்டோ எடுக்கும் ஐடியா மனைவி சிஞ்சுவுக்கும் பிடித்திருந்தது. இந்தப் போட்டோக்கள் தான் இப்போது டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications