கேரள நரபலி திடுக்: இரு பெண்களின் முக்கிய உறுப்புகள் மாயம்.. இதயம் எங்கே? ரூ 20 லட்சத்திற்கு விற்பனை?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலில் முக்கிய உறுப்புகள் மாயமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் நடந்த நரபலி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷபி, மசாஜ் சிகிச்சை நிபுணர் டாக்டர் பகவந்த் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணையில் அன்றாடம் ஒரு திடுக் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. நேற்றைய தினம் நடந்த விசாரணையில் 10 கிலோ மனித இறைச்சியையும் முக்கிய உடல் உறுப்புகளையும் பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தியுள்ளனர்.

குக்கரில் மனித மாமிசம்

குக்கரில் மனித மாமிசம்

மாமிசம் வேக வைக்க பயன்படுத்திய குக்கரை போலீஸார் கைப்பற்றினர். பிரிட்ஜில் உடல் பாகங்களை வைத்திருந்தது குறித்து முகமது ஷபியிடம் விசாரணை நடத்திய போது பல திடுக் தகவல்களை அவர் தெரிவித்திருந்தார். பணம் சேர சிறப்பு பூஜை நடத்துவதாக கூறிய ஷபி, பகவந்த் சிங்கிடம் சிறுக சிறுக ரூ 6 லட்சம் வரை பணம் வாங்கியிருந்திருக்கிறார்.

ரூ 6 லட்சம்

ரூ 6 லட்சம்

அதை பகவந்த் சிங் திருப்பி கேட்ட போது தான் நரபலி கொடுத்து அந்த மாமிசத்தை விற்பனை செய்தால் ரூ 6 லட்சத்திற்கு மேல் பணம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளார். பெங்களூரில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் அவரிடம் ரூ 20 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்றும் கூறியள்ளார். இதை நம்பிய பகவந்த் சிங்கும் லைலாவும் ரோஸ்லினை நரபலி கொடுத்த பிறகு அவர்களது மாமிசத்தை வாங்க யாரும் வரவில்லை.

நல்ல நேரத்தில் நரபலி

நல்ல நேரத்தில் நரபலி

அதுகுறித்து பகவந்த் சிங் கேட்டதற்கு நல்ல நேரத்தில் நரபலி கொடுத்தால்தான் எல்லாம் பலிக்கும். எனவே வேறு ஒரு பெண்ணை நல்ல நேரத்தில் நரபலி கொடுத்தால் கூடுத ல் விலை கொடுத்து நரமாமிசத்தை வாங்க ஆட்கள் வருவார்கள் என ஷபி கூறியதை டாக்டர் தம்பதி நம்பினர். பத்மாவை நரபலி கொடுத்த பிறகு டாக்டர் தம்பதியை மிரட்டி பணம் பறிக்கலாம் என ஷபி திட்டமிட்டிருந்தார்.

ரூ 20 லட்சத்திற்கு விற்பனையா

ரூ 20 லட்சத்திற்கு விற்பனையா

இந்த நிலையில் பத்மா, ரோஸ்லின் ஆகியோரின் இதயம், சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் இல்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை உடல் உறுப்புகளை ரூ 20 லட்சத்திற்கு விற்றனரா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கசாப்பு கடையில் வேலை பார்த்த அனுபவம் மற்றும் பிரேத பரிசோதனை கூடத்தில் உதவியாளராகவும் இருந்ததால் ஷபியால் இரு பெண்களையும் வெட்டி கூறு போட முடிந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+