"பிரபல நடிகை"யின் பலாத்கார வீடியோவை நீதிபதி பார்த்தாரா? இரவெல்லாம் நீண்ட ஆபாசம்.. இது வேறயா? கொடுமை
திருவனந்தபுரம்: நடிகையின் பலாத்கார காட்சிகளை மாஜிஸ்திரேட் உள்பட 3 நீதிமன்ற ஊழியர்கள் பார்த்துவிட்டார்களாமே.. என்ன நடக்கிறது கேரளாவில்?
நடிகர் திலிப் குறித்த பாலியல் வழக்கு ஒன்று, கேரளாவில் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.. அதாவது, தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அந்த நடிகை... ஒருநாள், ஷூட்டிங்கை முடித்துவிட்டு கொச்சி திரும்பிக்கொண்டிருந்தபோது, பாலியல் ரீதியான தாக்குதல் அவர்மீது நடத்தப்பட்டுள்ளது.

பலாத்காரம்: அதாவது அவரது காரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை இன்னொரு வேனில் தூக்கி சென்று பாலியல் அட்டகாசத்தை நடத்தியிருக்கிறது... இதனை வீடியோவையும் எடுத்திருக்கிறது.
'நீ போலீசுக்கு போனால், உடனே இந்த வீடியோவை ரிலீஸ் செய்து விடுவோம்" என்று அந்த கும்பல் மிரட்டியது. ஆனால், மறுநாளே போலீசுக்கு ஓடினார் நடிகை.. இது சம்பந்தமான வழக்கு விசாரணையில், பிரபல நடிகர் திலீப் பெயர் அடிபட்டது.
அதிர்ச்சி: இவர் மீது அந்த நடிகை பாலியல் புகார் தரவும், கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் அதிர்ந்து போயின.. இப்போதுவரை இந்த கேஸ் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்த கேரள சினிமாவே இவர் கைக்குள்தான் இருக்கிறது என்பார்கள்.. அரசியல் கட்சிகளின் பேராதரவை பெற்றவரும்கூட.
ஆனாலும், போலீசார் 7 பேர் கைது செய்திருந்த நிலையில், திலீப்பையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தது.. நடிகையை பலாத்காரம் செய்த கும்பல் அக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்திருக்கவும், அந்த காட்சிகள் அடங்கிய ஒரு மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி கோர்ட்டில் ஒப்படைத்திருந்தனர்.
வீடியோ: இந்த மெமரி கார்டைதான், அனுமதியின்றி திறந்து பார்க்கப்பட்டுவிட்டதாம். சிலர் இந்த வீடியோவை திறந்து பார்த்துள்ளதால், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட நடிகை கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்... அத்துடன், விசாரணை அறிக்கையில் சில விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒருசில விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
"அங்கமாலி மாஜிஸ்திரேட் லீனா ரஷீத், பலாத்கார காட்சிகள் அடங்கிய இந்த மெரி கார்டினை ஒரு வருடத்துக்கு மேலாக தன்னிடம் வைத்திருந்துள்ளார்... அப்போது, மாஜிஸ்திரேட் லீனா ரஷீத், மாவட்ட நீதிபதியின் தனி உதவியாளர் மகேஷ், விசாரணை நீதிமன்ற சிரஸ்தார் தாஜுதீன் என 3 பேரும் கோர்ட்டிலேயே 3 முறை அனுமதியின்றி, இந்த மெமரி கார்டினை திறந்து பார்த்திருக்கிறார்கள்.
மெமரி கார்டு: அதாவது 2018ம் ஆண்டில் மாஜிதிரேட்டும், மகேஷ் 2018ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதியும், தாஜுதீன் 2021ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியும் இந்த மெமரி கார்டை திறந்து பார்த்துள்ளனர். மகேஷ் ராத்திரி 10.52 மணிக்கு தன்னுடைய செல்போனில் மெமரி கார்டை போட்டு பார்த்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாத்கார வழக்கில், "தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை என்பதால், ஒரு ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்..
பரபரப்பு: இந்த மனு நாளை அதாவது 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மாஜிஸ்திரேட் உள்ளிட்ட 3 நீதிமன்ற ஊழியர்கள் மீது தெரிவித்துள்ள பகீர் குற்றச்சாட்டு, கேரளாவையே அசைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications