"மனசே பதறுது.." மாடல் அழகியை இரையாக்கிய தோழி.. இரவெல்லாம் சுற்றிதிரிந்த கார்.. 4 பேரை தூக்கிய போலீஸ்
மாடல் அழகியை பலாத்காரம் செய்த பெண் உட்பட 4 பேர் கைதாகி உள்ளனர்
திருவனந்தபுரம்: 5 வருடங்கள் கழித்து, கேரளாவில் அதே போன்ற ஒரு பயங்கரம் மீண்டும் நடந்துள்ளது.. இதையடுத்து, ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் அந்த பெண்.. 19 வயதாகிறது.. மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர்..
அந்த பெண், இந்த மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 ஆண் நண்பர்களும் அந்த பார்ட்டிக்கு வந்துள்ளார்கள்..

மாடல் அழகி
மாடல் அழகி தோழிக்கும் அந்த 3 நண்பர்களையும் ஏற்கனவே அறிமுகம் உண்டு. எல்லோரும் சேர்ந்து பார்ட்டியில் தண்ணி அடித்துள்ளனர்.. மாடல் அழகி ஒருகட்டத்துக்கு மேல் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.. அதனால், அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக சொல்லி, அனைவரும் முன்வந்துள்ளனர்.. 3 இளைஞர்களும், ஒரு வாகனத்தில் அழகியை ஏற்றிவிடவும், அந்த ராஜஸ்தான் பெண், அவர்களுடன் செல்லாமல் வேண்டுமென்றே அந்த ஹோட்டலிலேயே நின்றுவிட்டார்.

விடிய விடிய
அந்த 3 இளைஞர்களும், மயங்கிய அழகியை தார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.. அந்த வாகனத்திலேயே அந்த பெண்ணை 3 பேரும் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதற்காகவே, கொச்சி சிட்டியில் பல இடங்களில், அந்த வாகனம் விடிய விடிய சுற்றிக் கொண்டே இருந்தது.. மாடல் அழகியை ஓடும் காரிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

விடிகாலை
பிறகு, மறுபடியும் ஓட்டலுக்கு சென்ற இளைஞர்கள், அங்கிருந்த, ராஜஸ்தான் தோழியையும் அதே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடுவுக்கு சென்றுள்ளனர்... அங்குதான் மாடல் அழகியின் வீடு உள்ளது.. விடியும் நேரம் நெருங்கி கொண்டிருக்கும்போது, அவரை வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார் ராஜஸ்தான் தோழி.. பிறகு அவர்கள் 4 பேரும் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்கள்.. மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று பார்த்துள்ளனர்..

உடம்பெல்லாம்
அப்போது உடம்பெல்லாம் காயங்களுடன் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்து பதறிப்போய், அவரை உடனடியாக கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.. பிறகு, மேல் சிகிச்சைக்காக களமசேரியில் உள்ள அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.. இதுகுறித்து போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்களும் விசாரணையில் இறங்கி, ராஜஸ்தான் பெண் உட்பட அந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், பார்ட்டி நடந்த அந்த ஹோட்டல் உட்பட பல இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தார் கார்
இதில் முதல் குற்றவாளியாக ராஜஸ்தான் பெண்ணை சொல்கிறார்கள்.. அவர்தான் வேண்டும் என்றே திட்டமிட்டு, தன்னுடைய தோழியை, ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கி, இப்படி ஒரு பிளானை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.. மாடலை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய பயன்படுத்திய தார் வாகனமும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை போலீஸ் வெளியிடவில்லை.. ஒருவேளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் தெரியவரும் என தெரிகிறது.

நடிகர் திலீப்
இதேபோல சம்பவம்தான், கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.. இந்த சம்பவத்தில் நடிகையை பலாத்காரம் செய்ததாக கூலிப்படையினர் கைதானர்கள்.. இந்த வழக்கில்தான், நடிகர் திலீப்பும் கைதானார்... இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கொச்சி பகுதியில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications