Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவியின் "திருவிளையாடல்".. பூஜை ரூமில் நுழைந்த வித்யா.. பின்னாடியே 65 வயசு நபர்.. என்னாச்சு தெரியுமா

பெண் மந்திரவாதி வித்யா என்பவரை கேரளா போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : பூஜையறைக்குள் வித்யா நுழைந்ததுமே, 65 வயது நபருக்கு இனம்புரியாத மகிழ்ச்சியும், பெருத்த நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது.. என்ன காரணம்?

சமீப காலமாகவே மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன... இது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. அதற்கு சோஷியல் மீடியா என்ற களத்தை சரியாக பயன்படுத்தி வியாபாரம் நடத்தி வருகிறது ஒரு கூட்டம்.

அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது.

 நயவஞ்சகம்

நயவஞ்சகம்

இதோ கண்ணெதிரே ஒரு நயவஞ்சகம் நடந்துள்ளது.. எப்படியெல்லாம் மனித மனங்களை, மாயாஜாலத்தால் வீழ்த்துகிறார்கள் என்று ஒரு சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது... திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன்.. 65 வயதாகிறது.. இவருடைய குடும்பத்தில் சில நாட்களாகவே அடுத்தடுத்து சிலர் இறந்துவிட்டார்கள்.. இதனால் விஸ்வாம்பரன் கடுமையான மன உளைச்சலிலும், வேதனையிலும் இருந்தார். இதனால், அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென்று பார்த்துள்ளார்.

 ஜோதிடம்

ஜோதிடம்

அப்போது அந்த ஜோதிடர் சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. அத்துடன், குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள தெற்றியோடு தேவி என்ற மந்திரவாதி இருக்கிறார்.. அவர் பெயர் வித்யா.. அந்த பெண் மந்திரவாதி வித்யாவை அழைத்து பரிகார பூஜை நடத்துங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி உள்ளார்.. உடனே விஸ்வாம்பரன், களியக்காவிளை சென்று, பெண் மந்திரவாதி வித்யாவை கடந்த வருடம் சந்தித்தார். வித்யாவும், நான் நேரடியாகவே வீட்டுக்கு வந்து பரிகார பூஜை செய்கிறேன் என்று சொல்லி உள்ளார்..

 பூஜையறை

பூஜையறை

அடுத்த சில நாட்களில், விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வித்யா வந்தார்.. அவருடன் மேலும் சிலரும் வந்திருந்தனர்.. ஒவ்வொரு அறையாக வித்யா சுற்றி பார்த்தார்.. "வீடு முழுவதும் சாப தோஷம் இருக்கிறது.. அதனால், படுக்கையறையில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றார்.. அதன்படி, அந்த வீட்டிலேயே ஒரு ரூமை, பூஜை அறையாக மாற்றம் செய்யப்பட்டது.. அந்த வீட்டிலேயே ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் பூஜை நடத்தினார்கள்.. ஒரு வாரம் கழித்து, "ஐயோ.. இத்தனை பூஜைகள் செய்தும், தேவியின் சாபம் கொஞ்சம் கூடகுறையவில்லையே" என்று வித்யா கவலையுடன் விஸ்வாம்பரனிடம் சொன்னார்.

 ஓபன் செய்யுங்கள்

ஓபன் செய்யுங்கள்

பிறகு, வீட்டில் உள்ள நகை, பணத்தை எல்லாம் மொத்தமாக எடுத்து வந்து பூஜையில் வையுங்கள், அதனுடன் சேர்த்து பூஜை நடத்த வேண்டும் என்றார்.. அதன்படியே, விஸ்வாம்பரனும் வீட்டில் இருந்த 55 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை எடுத்து வந்து வித்யாவிடம் தந்தார். ஆனால் வித்யா, அந்த பணத்தையும் நகையையும் கையில் வாங்காமல், பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு போகும்படி சொல்லி உள்ளார்.. பூஜையை முடித்ததும் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து கிளம்பிவிட்டார்..

 ஓபன் பண்ணாதீங்க

ஓபன் பண்ணாதீங்க

2 வாரங்கள் ஆனது.. அப்போது வித்யாவை விஸ்வாம்பரன் தொடர்புகொண்டு, பீரோவை இப்போது திறக்கலாமா? என்று கேட்டுள்ளார்.. அதற்கு வித்யா, "தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை, 3 மாதம் கழித்து தான் பீரோவை ஓபன் செய்ய வேண்டும்" என்றார்.. விஸ்வாம்பரனும் 3 மாதம் காத்திருந்தார்.. மறுபடியும் வித்யாவிடம், "3 மாதம் முடிந்துவிட்டது, பீரோவை இப்போது திறக்கலாமா?" என்று கேட்டுள்ளார்.. அதற்கு வித்யா, "இப்போது வேண்டாம், ஒரு வருடம் கழித்து ஓபன் பண்ணுங்க" என்று சொல்லி உள்ளார்.. இப்போதுதான், விஸ்வாம்பரனுக்கு லைட்டாக சந்தேகம் வந்தது..

 ஓபன் ஓபன்

ஓபன் ஓபன்

அதனால், நேரடியாகவே பூஜை ரூமுக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார்... அப்போது அதில் வைத்திருந்த நகை, பணத்தை மொத்தமாக காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி உள்ளார்.. பணம், நகை எங்கே? என்று வித்யாவை கேட்டார்.. அதற்கு வித்யா, "அதையெல்லாம் தேவி, எனக்கே தந்துவிட்டாள், நீ இந்த விஷயத்தை போலீசில் சொன்னால், குடும்பத்தையே க்ளோஸ் செய்துவிடுவேன்".. என்று மிரட்டி உள்ளார்..

 மந்திரவாதி

மந்திரவாதி

வித்யாவின் சுயரூபம் அப்போதுதான் தெரிந்து, அதிர்ந்து போன விஸ்வாம்பரன், நேராக திருவனந்தபுரம் போலீசுக்கு போனார்.. நடந்த சம்பவத்தை சொல்லி புகாரும் தந்தார்.. போலீசாரும் அதன்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அதற்குள் மந்திரவாதி வித்யா மாயமாகிவிட்டார்.. அவருடன் வந்தவர்களில் ஒருத்தரையும் இப்போது காணோம்.. இவர்கள் எல்லாரையும் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது..

 கடவுளின் தேசம்

கடவுளின் தேசம்

கடவுளின் தேசம் என்று புகழப்பட்டு வரும் கேரளாவில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. இத்தனைக்கும் பெண்கள் அதிக அளவிலான கல்வி கற்ற மாநிலமும்கூட. ஆனால், அப்படிப்பட்ட மாநிலத்தில் நரபலி என்ற பெயரிலும், மந்திரம் என்ற பெயரிலும் சில பெண்களே, கிரிமினல்களாகி கொண்டிருப்பது பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் மனப் பிரச்சனைகளை, பயம், கலக்கம் போன்றவைகளால் எழக்கூடிய மூட நம்பிக்கைகளையே, மூலதனமாக்கி, காசு பார்க்கும் கூட்டமும் பெருகிவிட்டது.. ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் நிச்சயம் இருக்கத்தானே செய்வான்??

பூஜையறை

பூஜையறை

மந்திரவாதி வித்யா சம்பவத்தில், ஹைலைட் என்னவென்றால், வீட்டில் உள்ள தங்கம், பணத்தை எல்லாவற்றையும் பூஜையில் கொண்டு வந்து வைக்கும்படி வித்யா சொன்னதால், விஸ்வாம்பரனும் அப்படியே கொண்டு வந்துள்ளார்.. பிறகு அங்கிருந்து எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு, வித்யா மட்டும் அந்த பூஜையறையில் இருந்தாராம்.. சிறப்பு பூஜை செய்வதால், உள்ளே யாரும் வரக்கூடாது என்றும் சொன்னாராம்.. அதன்படியே எல்லாருமே ரூமுக்கு வெளியே நின்றிருக்கிறார்கள்.. வித்யாவுடன் வந்த உதவியாளர்களும் வெளியேதான் நின்றிருக்கிறார்கள்.. அந்த சமயத்தில்தான் பணம், தங்க நகைகளை ஆட்டைய போட்டுள்ளார் வித்யா.. அதற்கு பிறகும்கூட, பூஜை நடந்த 15 நாட்களுக்கு அந்த ரூமுக்குள்ளேயே போகாமலும் இருந்துள்ளனர் குடும்பத்தினர்.. நகை, பணம் மாயம் என்று கேட்டதற்கு, செய்வினை வைத்துவிடுவதாகவும் வித்யா போனிலேயே மிரட்டலும் விடுத்தாராம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+