வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சத்திய சோதனை.. ஜஸ்ட் 12 நிமிடம் தாமதம்.. 335 ரூபாய் எக்ஸ்ட்ராவா?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் டூ எர்ணாகுளம் வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சத்திய சோதனை.. அதைவிட ஜஸ்ட் 12 நிமிடம் தாமதமாக போற ரயிலுக்கு கட்டணம் 430 ரூபாய் தானாம்.. ஆனால் வந்தே பாரத்தில் போக 730 ரூபாய் வாங்குகிறார்களாம்.. என்ன சார் நியாயம் என்று கேரளாவில் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வந்தே பாரத் ரயிலின் உண்மையான வேகம் 180 கிமீ வரை பயணிக்க முடியும் என்று ரயில் பெட்டியை தயாரித்த ஐசிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசோ, தண்டவாளம் உள்ளிட்ட கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு அதிகபட்சம் 130 கிமீ வேகத்தில் பயணிக்க அனுமதிக்கிறது. ஆனால் 130 கிமீ வேகத்தில் இந்தியா முழுவதும் உள்ள தண்டாவளத்தில் போக முடியாது. இந்தியாவின் முக்கியமான வழித்தடங்கள் மட்டுமே 130 கிமீ வேகம் வரை செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான வழித்தடங்களில் தற்போது 100 முதல் 110 கிமீ வேகம் வரை தான் பயணிக்க முடியும். அதுதான் யதார்த்தம்.

இந்த சூழலில் வந்தே பாரத் ரயில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டிலாவது வந்தே பாரத் ரயில் சென்னை முதல் விழுப்புரம் வரையிலும், சென்னை முதல் ஜோலார்பேட்டை வரையிலும், ஏன் கோவை வரையிலுமே கூட 130 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். மற்ற பகுதிளில் ரயிலின் வேகம் 130 கிமீ அளவிற்கு இன்னமும் அதிகரிக்க முடியாத நிலை இருக்கிறது. தண்டவாள கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே 130 கிமீ வேகத்தில் போக முடியும்..அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை விட அசுர வேகத்தில் செல்வதாக சிலர் நம்புவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன்கள் கூறும் போது, உண்மையில் இப்போது உள்ள ரயில்வே தண்டவாளங்கள் கட்டமைப்பு காரணமாகவே வந்தே பாரத் செல்லும் வேகத்தில் அனைத்து ரயில்களுமே பயணிக்க முடியும். அதனால் ரயிலின் வேகத்தை பொறுத்தவரை மற்ற ரயில்களுக்கும் வந்தே பாரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றார்கள்.
Vande Bharat takes 03.05 hours to reach Ernakulam from Trivandrum and the fare is ₹765. Janshatabdi takes 12 mts longer to cover the same distance for just ₹430, almost half the fare of Vande Bharat. Source: IRCTC app #VandeBharatExpress #fact pic.twitter.com/e1kCxzyqhy
— S. Anandan (@Anandans76) October 1, 2023
உதாரணமாக கேரளாவில் வந்தே பாரத் ரயில் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்ல 3.05 மணி நேரம் ஆகிறது. இதற்கு கட்டணமாக 765 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் ஜன்சதாப்தி ரயில் அதைவிட 12 நிமிடம் தாமதாக திருவனந்தபுரம் செல்கிறது. இதற்கு 430 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரயில்களின் நேர அட்டவணை என்பது காலை 5.20க்கு திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பினால் 8.25க்கு எர்ணாகுளம் செல்கிறது. அதேநேரம் காலை 5.55 மணிக்கு செல்லும் ஜன்சதாபத்தி ரயில் 9.12க்கு எர்ணாகுளம் செல்கிறதாம். வெறும் 12 நிமிடமே வேகமாக செல்வதற்காக 335 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டுமா என்று கேரளாவில் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதனிடயே இப்படி கேள்வி எழுப்பிய ஆனந்தன் என்பவருக்கு சிலர் பதிலடியும் கொடுத்துள்ளார்கள். ஒருவர் ஏற்கனவே இருக்கும் ரயில்களை விட வந்தே பாரத் வேகமாக இருக்கும் என்று யாராவது சொன்னார்களா? இது எனக்கு நினைவில் இல்லை. எந்த அதிகாரி சொன்னார் என்பது குறித்து லிங்க் இருந்தால் அனுப்புங்கள் என்று கூறினார்.
இதேபோல் ஏசி இருக்கையும், வழக்கமான படுக்கை வசதி பெட்டி டிக்கெட் கட்டணமும் ஏன் வேறுபடுகின்றன என்பதை தயவுசெய்து சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ள மற்றொரு நெட்டிசன், ஏசி கட்டணம் 2வது கிளாஸ் படுக்கை வசதியைவிட 300 ரூபாய் அதிகம் ஏன் கேட்கிறார்கள் என்றால், வேகம் காரணமல்ல, ஆடம்பரம், வசதி, ரயிலின் உள்கட்டமைப்பு போன்றவை தான். அந்த வகையில் தான் வந்தே பாரத் ரயிலை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications