ஒரு மழைக்கே தாங்கலையே.. உள்ளே நீர் சொட்ட சொட்ட பயணம்.. வந்தே பாரத் ரயிலில் போன பயணிகளுக்கு ஷாக்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலில் நேற்று முதல்நாள் மழையில் நீர் ஒழுகிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 நாட்களுக்கு முன் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.
ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.
இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கூடுதல் அதிர்ச்சி: கூடுதல் அதிர்ச்சியாக கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலில் நேற்று முதல்நாள் மழையில் நீர் ஒழுகிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ரயிலின் மேல் பாகத்தில் இருந்து இப்படி நீர் ஒழுகி உள்ளது. மழை காரணமாக உள்ளே நீர் வந்து உள்ளது. ரயிலின் executive கோச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் கண்ணூர் வந்ததும் அதன் சீலிங்கில் இருக்கும் விரிசல் சரி செய்யப்பட்டு உடனே மாற்றப்பட்டது.
இந்த பாதிப்பால் ரயில் சேவை பாதைக்கப்படவில்லை. அதே சமயம் ரயிலில் நீர் ஒழுகிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

தாமதம்: முன்னதாக சோதனை ஓட்டத்திலேயே இந்த ரயில் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் 7. 20 மணி நேரத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் இருந்து கன்னூர் வந்தே பாரத் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது .
இந்த ரயில் வெறும் 70 கிமீ வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. கன்னூரில் பிற்பகல் 2.10க்கு தொடங்கி இரவு 9.30 மணிக்குத்தான் இந்த ரயில் திருவனந்தபுரம் வந்துள்ளது.
சராசரியாக இரண்டு இடங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ரயில் பயணத்தை விட இது 10 நிமிடம் அதிகம் ஆகும். வந்தே பாரத் ரயில் இப்படி முதல் நாள் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது.
அதன்பின் நேற்று முதல் பயணத்திலும் ரயில் தாமதமாக சென்றது.

வரவேற்பு: சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
Vande Bharat can be operated only on Sunny days.
— Renjith Thomas (@TowardsLiberti) April 29, 2023
pic.twitter.com/ZVMFbBqY6Q
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications