கேரளாவை உறைய வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவங்கள்.. பெண் புகாரால் அம்பலமான அசிங்கம்
Recommended Video
திருவனந்தபுரம்: மனைவிகளை மாற்றி, உல்லாசம் அனுபவித்து வந்த கேரளாவை சேர்ந்த நபர்களை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், ஆழப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷபின், டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து வரும் அவரது மனைவி பெயர் சிந்து (32) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இருவரது வாழ்க்கையும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது, கடந்த மார்ச் மாதம் வரை.
ஆம்.. கடந்த மார்ச் மாதம், ஷேர்சாட் சமூக வலைத்தளத்தில் ஷபின் ரொம்பவே பிஸியான பிறகுதான் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.

காரில் அசிங்கம்
ஷேர்ஷாட் ஆப் மூலமாக, கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் ஷபினுக்கு நண்பர் ஆனார். அவரும், ஷபினும், மனைவிகளை மாற்றிக் (wife swapping) கொள்வதில் ஆர்வம் காட்டி பேசியுள்ளனர். இதையடுத்து, ஒரு நாளை குறித்து, இந்த செயலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இவ்வாண்டு மார்ச் மாதம்தான், முதல் முறையாக அந்த அசிங்கம் நடந்துள்ளது. சிந்துவிடம் இந்த விஷயத்தை கூறி, அவரை சம்மதிக்க வைத்த ஷபின், தனது சாட்டிங் நண்பருடன், சிந்துவை காரில் வைத்து உறவு கொள்ள வைத்துள்ளார்.

தொடர்ந்த கொடுமை
இதன்பிறகும், திருப்தியடையாத ஷபின், ஷேர்சாட் ஆப் மூலம், பிற ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, அந்த ஆண்களின் மனைவிகளை ஷபினும், ஷபின் மனைவியை, அந்த ஆண்களும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

கூட்டு பலாத்காரம்
இதேபோல, கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகபள்ளி என்ற ஊரில் உள்ள ஒரு இளம் தம்பதி ஷபினுக்கு பழக்கம் ஆகியுள்ளார். அவர்கள் வீட்டுக்கு 3 முறை சென்ற இந்த தம்பதி, மாறி மாறி உறவு கொண்டுள்ளனர். மனைவியை ஒரு ஆணுடன் மட்டும் மாற்றிக் கொண்டது கொஞ்ச காலத்தில் ஷபினுக்கு சலித்துப்போயுள்ளது. எனவே ஒரே நேரத்தில் நிறைய ஆண்களுடன் சிந்துவை உறவு கொள்ள வைத்தும் ரசித்துள்ளார் சீழ் பிடித்த மனதுக்கு சொந்தக்காரரான ஷபின்.

மோசமான ஆண்கள்
சமீபத்தில் திருவள்ளா என்ற பகுதியில் ஒரு தம்பதி வீட்டுக்கு ஷபினும், சிந்துவும், சென்றுள்ளனர். அந்த ஆணை பார்த்ததும், சிந்து உறவு கொள்ள சம்மதிக்கவில்லை. இருப்பினும், அந்த பெண்ணுடன் ஷபின் உறவு வைத்துவிட்டு திரும்பியுள்ளார். இதையடுத்து சிந்துவிடம் சண்டை போட ஆரம்பித்துள்ளார் ஷபின். சொல்லும் ஆண்களுடன் எல்லாம் உறவு வைக்காமல் நீ எப்படி மறுக்கலாம் என கேட்டுள்ளார். சில ஆண்கள் வெறித்தனமாக உறவு கொள்வதாகவும், எனவே அவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்றும் கூறிவிட்டார் சிந்து.

போலீசில் புகார்
இருப்பினும் சிந்துவை கட்டாயப்படுத்திய ஷபின், சம்மதிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதன்பிறகு, மற்றொரு ஜோடி வீட்டுக்கு சிந்துவை, தனது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார் ஷபின். அப்போது ஓடிக் கொண்டிருந்த ஸ்கூட்டரில் இருந்து கீழே குதித்த சிந்து, காயங்குளம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்தனர் காவல்துறையினர். உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தல், பெண்களின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவித்தல், பலாத்காரம், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து ஷபின் உட்பட நான்கு ஆண்களை கைது செய்துள்ளனர்.

கேரளாவில் முதல் முறை
கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே 23 முதல் 38 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து கணவரை மாற்றிக் கொண்ட பெண்களை காவல்துறை கைது செய்யவில்லை. மேலும், சிந்துவுடன், முதல் முதலில் காரில் வைத்து உறவு கொண்ட கோழிக்கோடு நபரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. வட இந்தியாவில் கேள்விப்பட்டிருந்தாலும், கேரளாவில் சோஷியல் ஆப் மூலமாக மனைவி மாற்றப்பட்ட சம்பவம் இதுதான் முதல் முறை. அம்மாநிலம் முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
