கொடுமை.. விரட்டிய தெருநாய்கள்.. பயந்து ஓடிய 38 வயது பெண்.. லாரியில் சிக்கி பலி
திருவனந்தபுரம்: தெருநாய்களுக்கு பயந்து ஓடிய பெண் மீது லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
என்னதான் நன்றியுள்ள ஜீவன் என நாம், நாய்களை கூறினாலும், சில நேரங்களில் மனிதர்களின் உயிருக்கு அவை எமனாகி விடுகின்றன. வீட்டில் வளர்க்கும் சில வெளிநாட்டு ரக நாய்கள் அவற்றின் உரிமையாளர்களை கடித்துக் கொன்ற சம்பவங்கள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். வீட்டில் வளர்க்கும் சில நாய்கள் தான் இப்படி என்றால், தெருநாய்களின் தொல்லையை பற்றி சொல்லவே தேவையில்லை.

இரவு நேரங்களில் வரும் வாகனங்களை துரத்துவது, வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கடிப்பது என தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளை நாம் நிச்சயம் எதிர்கொண்டிருப்போம். சில சமயங்களில் நாய்கள் துரத்தும் போது வண்டியில் இருந்து கீழே விழுந்தும், எதிரே வந்த வாகனங்களில் மோதியும் பலரும் உயிரிழந்துள்ளனர். தெருநாய்களுக்கு பயந்தே சிலர் இரவு நேரங்களில் வீடு திரும்பாமல் அலுவலகங்களில் தங்கியிருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
இப்படிப்பட்ட தெருநாய்களால் கேரளாவில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சஜிதா (38). இவர் தனது மகன் மற்றும் மகளை தெருமுனையில் நிற்கும் பள்ளி வாகனத்தில் கொண்டு சென்று ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இன்று காலை சஜிதா தனது பிள்ளைகளை பள்ளி வாகனத்தில் ஏற்ற சென்றிருக்கிறார்.
பின்னர் அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது அங்கிருந்த 5 தெருநாய்கள் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றன. இதனால் பயந்து பயந்து சஜிதா சென்றிருக்கிறார். ஒருகட்டத்தில், அவை குரைத்தபடி சஜிதாவை கடிக்க வந்துள்ளன. இதனால் பயந்துபோன அவர் வேகமாக ஓட தொடங்கினார். ஆனால் நாய்களும் அவரை விடாமல் துரத்தியுள்ளன. வேகமாக ஓடியதால் திடீரென நிலைத்தடுமாறி சஜிதா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சஜிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாய் இறந்தது தெரியாமல் அவரது பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் தாயார் இறந்த தகவல் அவர்களுக்கு கூறப்பட்டது. இதையடுத்து, வீட்டுக்கு வந்த பிள்ளைகள் தாயின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் கண்களை கலங்கச் செய்தது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications