நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்.. பாலக்காட்டில் போக்குவரத்து பாதிப்பு.. பின்னணியில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
கேரளா மாநிலம் பாலக்காடு தெற்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐஎம்ஏ ஜங்ஷன் உள்ளது. இந்நிலையில் தான் நேற்று திடீரென்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு வந்தார்.

சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்' செய்தார்.
நடுரோட்டில் அவர் ‛நமாஸ்' செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாலக்காடு தெற்கு போலீசார் உடனடியாக வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி தங்களுடன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சொத்து பிரச்சனையை தீர்க்க கோரி விநோதமான முறையில் போராட்டம் நடத்தியது தெரியவந்தது.
அதாவது அந்த பெண்ணுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து தகராறு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அவர் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் பிரச்சனை தீர்த்து வைக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.
இதற்காக தான் அவர் பிஸியான ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்துக்கு இடையூறாக நமாஸ் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி பாலக்காடு தெற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மீட்கப்பட்ட பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். இவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு நிலப்பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்ல சாலையில் நமாஸ் செய்துள்ளார்.
அந்த பெண்ணின் மனநிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அந்த பெண்ணின் சகோதரரை அழைத்து எச்சரிக்கை செய்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்'' என்று கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications