22 நாட்கள்.. ரூமிற்குள் பூட்டி.. பெண்ணின் உடம்பெல்லாம் சூடு வைத்து.. "வீடியோ" எடுத்த சைக்கோ.. ஷாக்
காதலியை சித்ரவதை செய்த சைக்கோ காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்: ஒரு பெண்ணை அபார்ட்மென்ட்டில் அடைத்து வைத்து, மொத்தம் 22 நாட்கள் பாலியல் சித்ரவதை செய்துள்ளார் ஒரு சைக்கோ இளைஞன்.. இந்த சம்பவம்தான் கேரளாவையே உலுக்கி எடுத்து வருகிறது.
மார்ட்டின் ஜோசப் என்பவர் மீது பாலியல் புகார் ஒன்று எர்ணாகுளம் போலீசாருக்கு வந்தது.. அதுகுறித்து விசாரிக்க அவர் வீடு தேடி சென்றபோது, ஜோசப் தப்பி விட்டிருந்தார்..
எனவே தீவிர வேட்டையில் போலீசார் இறங்கினர்.. எர்ணாகுளம் மாவட்டம் காகநாட்டில் இருந்து திருச்சூருக்கு இவர் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது..

தனிப்படை
எனவே, தனிப்படை அமைத்து 3 நாட்கள் தீவிரமாக தேடி, ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்தான் ஜோசப் இவர் கண்ணூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.. அந்த இளம்பெண் ஒரு பேஷன் டிசைனர். இருவரும் கல்யாணமே செய்து கொள்ளாமல் அப்பார்ட்மென்ட் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

கொச்சி
இதையடுத்து, அந்த பெண்ணை கொச்சி மெரைன் ட்ரைவில் உள்ள இன்னொரு அப்பார்ட்மென்ட்டிற்கு அழைத்து சென்ற இளைஞன், அந்த வீட்டிற்குள்ளேயே காதலியை அடைத்து வைத்துள்ளார்.. கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை அதாவது 22 நாட்கள், அந்த பெண்ணை, ஜோசப் பாலியல் சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்ரவதை
அவருக்கு உடம்பெல்லாம் சூடு வைத்திருக்கிறார்.. உடம்பெல்லாம் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி துடிதுடிக்க செய்துள்ளார்.. தினம், தினம், அந்த பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கதற செய்துள்ளார்.. நிர்வாண வீடியோக்களை எடுத்து கொண்டே இருந்துள்ளார்.. மறுக்கும்போதெல்லாம் பெல்டால் சரமாரியாக அடித்து தாக்கியும் வந்துள்ளார்..

கைது
இவ்வளவும் போலீஸ் விசாரணையில் உறுதியானது. இன்று ஜோசப்பை கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். இந்த சைக்கோ மார்ட்டின் எந்த வேலை வெட்டிக்கும் போவது கிடையாதாம்.. எப்போது பார்த்தாலும் பிஎம்டபிள்யூ காரில் ஊரெல்லாம் சுற்றி வருவாராம்..

விசாரணை
அதை வைத்தே தான் பணக்காரன் என்று சொல்லி, பல பெண்களை தன் வலையில் விழ வைத்துள்ளாராம்.. இதனால் மேலும் பல பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து மார்ட்டினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.,. தொடர்ந்து இவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications