லவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்!
காதலியை தீ வைத்து எரித்து காதலன் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
திருவனந்தபுரம்: "என்னை லவ் பண்ண போறியா இல்லையா தேவிகா" என்று கேட்டபடியே 17 வயது பெண் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார் இளைஞர் ஒருவர்!
கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த ஷாலன் என்பவரது மகள் தேவிகா. 17 வயதுதான் ஆகிறது. அங்குள்ள ஒரு ஸ்கூலில் பிளஸ்-2 படித்து வந்தாள்.

இவரை ஒரு பெயிண்டர் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். அவர்பெயர் மிதுன். எர்ணாகுளம் வடக்கு பரவூரை சேர்ந்தவர். ஆனால் மிதுனை தேவிகாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரது காதலை ஏற்க முடியாது என்று பலமுறை சொல்லிவிட்டார்.
ஆனாலும் பெயிண்டர் விடவே இல்லை. தேவிகாவின் பின்னாடியே போய் தன் காதலை ஏற்று கொள்ளுமாறு வற்புறுத்தியே வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்துவிட்டார்.
அதனால், இன்று விடிகாலை ஒரு மணி இருக்கும்.. மிதுன் கையில் பெட்ரோல் கேனுடன் தேவிகா வீட்டிற்குள் நுழைந்து விட்டார். வீட்டில் பெற்றோர், மற்றவர்கள் இருப்பார்களே என்று நினைக்கவே இல்லை. தேவிகா வீட்டு கதவை பலமாக தட்டினார்.
அப்போது, தேவிகாவின் அப்பா ஷாலன் கதவை திறந்தார். ஆனால் அவரை கீழே தள்ளி விட்டு தேவிகா படுத்திருந்த பெட்ரூமுக்குள் நுழைந்தார் மிதுன். சத்தம் கேட்டு அலறி அடித்து எழுந்த தேவிகா மீது கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில், தேவிகா அலறி நெருப்பில் துடித்தார்.
இதை பார்த்ததும், மிதுன் மீதமிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் 2 பேருமே கதறினர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்க முயன்றனர். ஆனால் தேவிகா அங்கேயே கருகி இறந்துவிட்டார். மிதுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதுமே இறந்துவிட்டார். இந்தசம்பவம் காக்கநாடு பகுதியை அதிகமாக உலுக்கி உள்ளது.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications