தமிழ்நாட்டிலேயே முதல் முறை.. பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சூப்பர் அனுபவம்.. கலெக்டர் அதிரடி
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் படகு சவாரி செல்வது சர்வதேச அளவில் புகழ் பெற்றது. சதுப்பு நில காட்டில் ஏரியும் கடலும் இணையும் இடத்தில் படகுசவாரி செல்வது அலாதியான அனுபவம் ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சோலார் மூலம் இயங்கும் படகு சேவையை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் என்பது உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் நிலமாகும். பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் வனமானது இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரம், வடக்கில் வெள்ளாறும் சரணாலயத்திற்கு தெற்கில் கொள்ளிட கரையோரத்திற்கும் இடையில் அமைந்திருக்கிறது. பிச்சாவரம் வனப்பகுதியில் படகு சவாரிக்கு 400 க்கும் மேற்பட்ட நீர் வழிகள் உள்ளன.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் முன்னெடுப்பாக மாநிலத்தின் முதல் காலநிலை மீள்திறன்மிகு கிராமம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் தமிழ்நாட்டில் முதல் முறையாக சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் படகு சேவை தொடக்க விழா பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு இல்லத்தில் நேற்று நடந்தது.
இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, படகு சேவையை தொடங்கி வைத்து, அதில் அலுவலர்களுடன் பயணம் செய்துள்ளார். பின்னர் இது பற்றி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக பல்வேறு மாவட்டங்களில் 11 பகுதிகள் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவுக்குட்பட்ட கிள்ளை பேரூராட்சி இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிள்ளை பகுதியை பசுமை வளாகமாக மேம்படுத்திடும் வகையில் வனத்துறை, மீன்வளத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பிச்சாவரம் படகு இல்லத்தில் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, காற்று மற்றும் நீர் மாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை சுற்றுலாவாக ஏற்படுத்திடும் வகையிலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் கிராமங்களின் மீள்திறன்மிகு வளர்ச்சியை வலுப்படுத்தவும் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 100 சதவீதம் சூரிய ஆற்றலால் இயக்கப்படும் சோலார் மின்படகு சேவையை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications