ஊட்டிக்கு கோவையில் இருந்து செல்ல மூன்றாவது பாதை.. திரில்லான பயணத்திற்கு நிச்சயம் கியாரண்டி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: கோவையில் இருந்து ஊட்டி செல்வோர் பொதுவாக மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாகவே செல்லலாம் அல்லது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு போகலாம். ஆனால் மேட்டுப்பாளையம் போகாமலேயே ஊட்டிக்கு போக ஒரு பாதை உள்ளது. மேட்டுப்பாளையத்திற்கு சில கிலோ மீட்டர் தூரம் முன்பே காரமடை வரியாக முள்ளி, கீழ்குந்தா, மஞ்சூர் வழியாக வேறு ஒரு பாதையில் ஊட்டிக்கு போக முடியும். மிகவும் அடர்ந்த இந்த வனப்பகுதி பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிக்க ஆசை இருந்தால் மறந்துவிடுங்கள்.

ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்று ஆசையுடன் சென்னையில் இருந்து அல்லது பெங்களூரில் இருந்து ரயிலில் வருவோர் கோவையில் இறங்கி அங்கிருந்து கார் அல்லது வாகனத்தில் மேட்டுப்பாளையம் பயணித்து செல்வார்கள். சொந்த வாகனத்தில் வந்தால் கோவைக்கு வராமல் அவினாசி வழியாக அன்னூரை கடந்த மேட்டுப்பாளைம் செல்வார்கள். அங்கிருந்து குன்னூர் வழியாக செல்வார்கள்...குன்னூருக்கு போகாமல் கோத்தகிரி வழியாகவும் ஊட்டிக்கு போகலாம். கோடை காலத்தில் குன்னூர், கோத்தகிரி பாதைகள் ஒரு வழிப்பாதை ஆக்கப்படும். போகும் போது ஒரு வழி, வரும் போது ஒரு வழி என்று இருக்கும்.

A thrilling route on the forest route to Ooty Amazing Kilkunda route

கோவையில் இருந்து செல்வோர் பெரிய நாயக்கன் பாளையம், காரமடை வழியாக மெயின் சாலையில் மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து வழக்கம் போல் குன்னூர் அல்லது கோத்தகிரி வழியாக ஊட்டி சென்று வருகிறார்கள். எனினும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் போகாமல் இன்னொரு ரூட் வழியாகவும் போகமுடியும். கோவையில் இருந்து நேரடியாக மஞ்சூர் காட்டுப்பாதை வழியாக ஊட்டிக்கு போக முடியும்.

காரமடை வழியாக செல்லும் இந்த மஞ்சூர் ரூட் அழகான பாதை என்றாலும், மிகவும் வனவிலங்கு நடமாட்டம் உள்ள ஆபத்தான பாதையாகும். பேருந்துகள் தினமும் சென்று வருகின்றன. பெரிய வாகனங்களில் செல்ல முடியும். ஆனால் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் யானைகள் சர்வ சாதாரணமாக சுற்றும். எனவே இந்த பாதையில் செல்வோர் மிக கவனமாகவே செல்ல வேண்டும்..

கோவையில் இருந்து காரமடை வழியாக முள்ளி, குந்தா, மஞ்சூர் வழியாக கீழ்குந்தா சென்று அங்கிருந்து ஊட்டிக்கு போக முடியும்.. இந்த சாலையை பொறுத்தவரை பகலில் போக முடியும். ஆனால் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவது இல்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.. இந்த சாலையில் பேருந்துகள் செல்கின்றன. காரமடையில் இருந்த கிளம்பினால் வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை மிக அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும்.. இது மிகச்சிறிய தார் சாலையாகும் . இந்த சாலையில் யானைகளை சர்வ சாதாரணமாக உலாவும். கோவையில் இருந்து கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வதை விட அங்குள்ள அரசு பேருந்தில் செல்வதே மிகவும் நல்லது என்கிறார்கள் உள்ளூர் மக்கள் அதிகாலை 5.40க்கு ஒரு பேருந்தும், காலை 10.30க்கு ஒரு பேருந்தும் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருவோர், முள்ளி என்ற செக்போஸ்டில் உங்களை பற்றி விவரங்களை பதிவு செய்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. காரமடை மஞ்சூர் சாலையில் முள்ளி செக் போஸ்ட் முதலில் வரும். முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் இரண்டு ரூட் போகிறது. ஒரு ரூட் கெத்தை வழியாக கேரளா போகலாம். கேரளாவின் அட்டப்பாடிக்கு இந்த பாதை வழியாக போக முடியும்.

அடுத்த பாதை தான் மஞ்சூர் பாதையாகும். ஊட்டி செல்ல விரும்புவோர் பயணிக்கலாம். பேருந்தில் அல்லது காரில் பயணித்தபடி சென்றால், எதிரில் யானைகள் அதிகமாக வருவதையும், நிறைய காட்டெருமைகள் வருவதையும் காண முடியும். ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல் இந்த பாதையில் உள்ள ஒரு இடத்தில் எடுத்தது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

மஞ்சூருக்கு பேருந்தில் போய் இறங்கினால், அங்கிருந்து ஊட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அந்த பாதையுமே அடர்ந்த வனப்பகுதி தான். திரில்லான பயணம் வேண்டும் என்போர் தாராளமாக போய் வரலாம். அங்கிருந்து கீழ்குந்தா சென்று தான் ஊட்டிக்கு போக முடியும்.. ஊட்டிக்கு இந்த வழியாக சென்றால் பயண நேரம் குறைவு என்று கூறுகிறார்கள். ஆனால் உள்ளூர் நிலவரம் அறிந்து செல்வது நல்லது. இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது கிடையாது. இரவில் வர அனுமதியும் கிடையாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+