ஓட்டலில் 2வது மாடி கழிவறையில் ஆச்சரியம்.. திறந்து பார்த்த சுற்றுலா பயணிக்கு.. மறக்க முடியாத சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு புகழ் பெயர்பெற்ற இடமாகும். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி புனித யாத்திரை வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஓட்டல்களில் அஜ்மீர் மற்றும் புஷ்கரில் உள்ள ஏராளமான விடுதிகளில் அறை எடுத்து தங்குவார்கள்.. அப்படித்தான் சில சுற்றுலா பயணிகள் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அங்கு கழிவறைக்கு சென்ற சுற்றுலா பயணி, கோப்பையில் உட்கார சென்ற போது, நாகப்பாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது. இதை பார்த்து ஆடிப்போனார்.
நாகப்பாம்பு மற்ற பாம்புகளை போல் இல்லாமல் சற்று வித்தியாசமானது. இரை தேடுவதற்காகவோ, பாதுகாப்பான இடத்தில் வசிப்பதற்காகவே இடம் பெறுவதை அதிகமாக பார்க்கலாம். அப்படி போகும் வழியில் மனிதர்கள் வந்தால், முடிந்தவரை அங்கிருந்து செல்லவே முயற்சிக்கும். சில நேரங்களில் மிக நெருக்கமாக மனிதர்கள் வரும் போது மற்றும் மனிதர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று நினைத்தால், கடித்துவிடும். நாகப்பாம்பு தனக்கு முன் உள்ளவர்களை பயமுறுத்தும் வகையில் முதலில் படம் எடுத்து ஆடும்.

நாகப்பாம்பு கடித்தால் எப்படி வலிக்கும்
அதன்பிறகே தாக்கும். நாகப்பாம்பு கடித்தால் மற்ற பாம்புகளை போல் இல்லாமல் கடுமையாக வலிக்கும். உடனே மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் நாகப்பாம்பு அதிகப்படியான விஷத்தை, கடிக்கும் போது செலுத்தி இருந்தால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் கடினமாகவும் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் புகழ் பெற்ற புனித யாத்திரை தலமான அஜ்மீரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
அஜ்மீரில் நாகப்பாம்பு
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள ஓட்டலில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அந்த ஓட்டலில் 2-வது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிர்ந்து போனார். அதிர்ஷ்டவசமாக செல்போனை பார்த்துக்கொண்டே உட்கார முயற்சிக்கவில்லை. கழிவறை திறந்தே இருந்துள்ளது. கழிவறை கோப்பையில் அமரும் முன்பாக பாம்பு படம் எடுத்தபடி நின்று இருப்பதை பார்த்துவிட்டார்.
கழிவறைக்குள் எட்டிப்பார்த்த பாம்பு
உடனே உஷாரான அவர், கழிவறை கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததுடன், பாம்பை செல்போனில் படம் பிடித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றவர்களும் வந்து கழிவறையை எட்டிப்பார்த்தபடி பேசுகிறார்கள். கருப்பு நிற நாகப்பாம்பான,அங்கு வந்தவர்களை கண்டு கொஞ்சம் கூட அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கிறது.
பத்திரமாக மீட்ட வனத்துறை
பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்குப் பின், கழிவறையில் இருந்து 5 அடி நீள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை பத்திரமாக மீட்டார்கள். 2-வது மாடியில் உள்ள கழிவறை கோப்பைக்குள் பாம்பு எப்படி வந்தது என்று பலரும் வனத்துறையினரிடம் கேட்டார்கள். எலி, தவளை போன்ற ஏதாவது இரையை துரத்திக் கொண்டு கழிவறை குழாய் வழியாக பாம்பு மேலே ஏறி வந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினார்கள். அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை. நாகப்பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications