கொடைக்கானல் சுற்றுலா வந்த இளைஞர்.. குணா குகையில் ரீல்ஸ் மோகம்.. இப்ப என்னாச்சு தெரியுமா?
கொடைக்கானல் : மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் போது பல இளைஞர்கள் குணா குகைக்கு வந்தார்கள். அப்போது வந்தவர்களில் பலர் ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது. குணா குகைக்கு வெளியில் கம்பிபோட்டு பூட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. குணா குகை உள்ள இடத்தின் முகப்பை தான் இன்று பார்க்கிறார்கள். இந்நிலையில் அங்கு அத்துமீறி கம்பியில் உள்ளே நுழைந்து ரீல்ஸ் போட்ட இளைஞருக்கு மறக்க முடியாத பரிசினை வனத்துறை தேடிப்பிடித்து தந்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகிறார்கள். சீசன் நாட்களில் இதைவிட அதிகமானோர் வருகிறார்கள். கொடைக்கானலை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது அதிக குளிரான பகுதியாகும்.

ஊட்டிக்கு நிகரான இடம்
ஊட்டிக்கு அடுத்தபடியாக குளிர் அதிகமாக உள்ள பகுதியாகும். கொடைக்கானலுக்கும் ஊட்டிக்குவெப்பநிலையை பொறுத்தவரை வெறும் ஒரு டிகிரி செல்சியஸ் தான் முன்னே பின்னே இருக்கும். ஆனால் ஊட்டியைவிட நகரமயமாகாமல், பசுமை பாதிக்கப்படாத பகுதியாக, இயற்கை, இயற்கையாவே இருக்கும் சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருக்கிறது. தற்போது கொடைக்கானலில் தென்மேற்கு பருவ மழை காலம் என்பதால்கிளைமேட் மிக அருமையாக இருக்கிறது. அடிக்க மழை பெய்வதுடன், மேகமூட்டமாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.
கொடைக்கானல் சுற்றுலா தலங்கள்
கொடைக்கானலை பொறுத்தவரை சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. செயற்கையாக உருவாக்கப்பட்ட நட்சத்திர ஏரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி, அதனை சுற்றியுள்ள பாதைகளில் குதிரை சவாரி மற்றும் சைக்கிள் பயணம், தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா,பிரைண்ட் பூங்கா, ரோஜா பார்க், பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் அருவி, புலிவால் அருவி, டம் டம் பாறை, டிரக்கிங் பிரியர்களுக்கு கொடைக்கானல் வெள்ளகவி சாலை, மன்னவனூர் ஏரி, மாதா ஆலயம், குறிஞ்சி ஆண்டவர் கோவில், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு என பல இடங்களை சொல்லலாம்.
குணா குகையில் ரீல்ஸ்
இதில் பலரும் குணா குகைக்கு வருவார்கள்.. அப்படி வருபவர்கள் திடீரென மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் வருவது போல் சில நேரங்களில் தடையை மீறி உள்ளே செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் தடையை மீறி போகக்கூடாது என்பதற்காகவே கம்பிகள் போடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு இளைஞர்கள் கம்பியை கடந்து சென்று ரீல்ஸ் எடுத்து போட்டியிருக்கிறார். இது வைரலான நிலையில் அவரை தேடி கண்டுபிடித்த கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகள், அவரை கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அபராதம் விதித்துடன், கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
பெரும் சிக்கல்
பொதுவாக குணா குகைக்கு போகிறவர்கள் அங்குள்ள கூட்டியில் ஏறி பார்க்காலாம். வேர்கள் நிறைந்த மரங்களில் புகைப்படம் எடுக்கலாம். அதையும் மீறி ஆர்வக்கோளாறில் உள்ளே சென்றால், அவர்களை மட்டுமல்ல, கொடைக்கானல் வனத்துறையினரை மட்டுமின்றி, காவல்துறை, தீயணைப்பு துறை என மொத்த துறைகளையும் ஸ்தம்பிக்க வைத்துவிடும். இவர்களின் ரீல்ஸ் மோகத்தால் குணா குகையில் அசம்பாவிதம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே குணா குகை வருவோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மது அருந்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்
அதேபோல் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்கள் அருந்திவிட்டு மலையில் பாட்டிலை தூக்கிப்போடுவதையும் அடியோடு தவிர்க்க வேண்டும். மேலும் மலையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது, தரையில் ஓட்டுவதைவிடவும் மிகவும் ஆபத்தானது.எனவே எந்த காரணம் கொண்டும் மது அருந்திவிட்டு கொடைக்கானலில் வாகனத்தை இயக்க வேண்டாம்.












Click it and Unblock the Notifications