இப்ப சபரிமலை போக பிளான் பண்றீங்களா.. வரலாறு காணாத கூட்டம்.. ஒரு நிமிஷம் இந்த வீடியோ பாருங்க
சபரிமலை: சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசிக்க பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து இப்போது சென்று வருகிறார்கள். ஆனால் அங்கு வழக்கத்தை விட மிகமிக அதிக அளவில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. மூச்சை முட்டும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. பம்பையில் கால் வைக்கும் இடம் எல்லாம் மனித தலைகளால் நிரம்பி இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
சபரிமலைக்கு கார்த்திகை மார்கழி மாதங்களிலும் மற்றும் தை முதல் வாரம் வரை பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள்.. கடந்த சில ஆண்டுகளாக சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிக்கல் இருந்தது. இந்த முறை எந்த கட்டுப்பாடும் இல்லை. முன்னதாக இவ்வளவு பக்தர்கள் தான் போக முடியும் என்றும், அவர்கள் போவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. இந்த முறை அப்படி இல்லை..

ஆன் ஸ்பாட்டில் ஆன்லைனில் புக் செய்து அப்படியே போக முடியும். பக்தர்களை கட்டுக்கடங்காமல் தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. இதன் காரணமாக வரலாறு காணாத கூட்டம் பம்பையில் இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் எல்லா பாதைகளும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. சபரிமலையில் பல மணி நேரம் மூச்சுத்திணறலுக்கு நடுவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க காத்துக்கிடக்கிறார்கள்.
சபரிமலை முதல் பம்பை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்ற கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் பம்பையில் கால் வைப்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. சபரிமலையில் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருந்தாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், கையை பிசையும் நிலையில் தான் நிலைமை இருக்கிறதாம்.
கடந்த 3 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் உள்ளதால் பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்து வருகிறார்கள்.
கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வரலாறு காணாத கூட்டம் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள்..
#Sabarimala TODAY CROWD AT PAMBA. Worst situation of devotees. pic.twitter.com/UaZyZGIrYm
— BK ASTROLOGY (@bala8882) December 12, 2023
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications