கோவையில் இருந்து வெறும் 55 கிமீ தூரத்தில்.. கடவுளின் தேசத்தில் காணக்கிடைக்காத தரிசனம்
கோவை: கோவையில் இருந்து வெறும் 55 கிமீ தூரத்தில் ஒரு தரமான வியூ பாய்ண்ட் இருக்கிறது. ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தால் நீங்கள் கடவுளின் தரிசனத்தையே நேரில் பார்க்கும் உணர்வு ஏற்படும். அது எந்த இடம் என்பதை இப்போது பார்ப்போம்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாநகரம் பாலக்காடு கனவாய் வழியாக தமிழ்நாட்டை கேரளா உடன் இணைக்கும் அற்புதமான நுழைவு வாயில் ஆகும். கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவை மாநகரம் பல ஆயிரம் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். தொழில் நகரமாக மட்டுமின்றி, பல்வேறு சுற்றுலா தலங்களை கொண்ட சூப்பர் நகரம் தான் கோவை..

கோவையை சுற்றி கூப்பிடும் தூரத்தில் அற்புதமான மலைகளும், காடுகளும்,அருவிகளும் அமைந்துள்ளது.. இதேபோல் பல்வேறு அபூர்வமான இயற்கை அற்புதங்களும், பொக்கிசங்களும் நிறைந்த பகுதியாக கோவை இருக்கிறது. கோவையில் சிறுவாணி, கோவை குற்றாலம், மருதமலை, வெள்ளியங்கிரி மலை, ஊட்டி, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி, பாலக்காடு உள்பட பல்வேறு இடங்கள் வெறும் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது. இதில் சில இடங்கள் மட்டுமே 2 மணி நேரம் முதல் 3 மணி நேர தூரத்தில் இருக்கிறது. மற்ற இடங்கள் எல்லாம் கோவை நகரத்தை ஒட்டியே அமைந்துள்ளது.
கோவை மாநகரம் சென்னை போல் இல்லை.. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஃபேன் அல்லது ஏசி போடாமல் உட்கார கூட முடியாது. ஆனால் கோவை மாநகரம் அப்படி அல்ல.. ஏராளமான மரங்களும் காடுகளையும் பக்கத்தில் வைத்திருக்கிறது. நகரம் முழுவதுமே நிறைய மரங்கள் உள்ளன. இதனால் கோவை நகரமே பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாக இருக்கிறது.

கோவையை சேர்ந்தவர்கள் அல்லது கோவைக்கு வந்தவர்களுக்கு மிக குறுகிய தூரத்தில் மலையில் உள்ள வியூ பாய்ண்ட் போக வேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்படிப்பட்டவர்கள் பயணிக்க வேண்டிய இடம் அட்டப்பாடி அப்பானூர் வியூ பாய்ண்ட் . வெறும் 55 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அப்பானூர் வியூ பாய்ண்ட் போனால் நிச்சயம் கடவுளின் தரிசனத்தை நேரில் பார்த்த உணர்வு கிடைக்கும்.
அட்டப்பாடி அப்பனூர் வியூ பாய்ண்ட் போக விரும்புவோர் காலை 6 மணி முதல் 10மணிக்குள் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.. அப்போது தான் வியூ பார்க்க அருமையாக இருக்கும்.

பசுமையான மலை பள்ளத்தாக்குகள், பனி விழும் இடங்கள், மேகக்கூட்டங்கள் ஒய்வெடுத்து செல்லும் அந்த இடத்தை காலையில் சென்று பார்ப்பது தான் சிறப்பானதாக இருக்கும். சொந்த வாகனங்களில் செல்வது தான் சிறப்பானதாக இருக்கும். இருசக்கர வாகனம் அல்லது காரில் செல்வோர் சுமார் 1 கிமீ தூரம் முன்பே வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டியது வரும்.
கஷ்டப்பட்டு நீங்கள் நடந்து சென்றால், அந்த வியூ பார்க்க அவ்வளவு அற்புதமாக இருக்கும். உங்கள் மனம் நீங்கள் அட்டப்பாடியில் தான் இருக்கீங்களா என்று உங்களையே ஒரு முறை கேட்கும். அதேநேரம் உயரமான இடம் என்பதால் பாதுகாப்பாக ஏறி செல்வது நல்லது. ஏனெனில் எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. மிக உயரமான பாறைகள் சில இடங்களில் உள்ளது. அந்த வியூ நன்றாக இருக்கும் என்றாலும், கவனமாக செல்ல வேண்டியது அவசியம் ஆகும். மற்றபடி அப்பனூர் வியூ பாய்ண்ட் கோவையில் உள்ள பலருக்கும் பிடித்த இடமாக உள்ளது. வார இறுதியில் காலையிலேயே போய் ஒரு ஜில் அனுபவத்தை பெற இந்த இடம் சிறப்பானதாக இருக்கும்.
-
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications