எது சேலத்துல சுவிட்சர்லாந்தா.. எங்கங்க? பார்வைக்கு பக்கா “ட்ரீட்” வைக்கும் பாதை - ரைடுக்கு ரெடியா
சென்னை: தமிழ்நாட்டுக்கு உள்ளே சுவிட்சர்லாந்தில் பயணிப்பதை போன்ற உணர்வை தரும் அழகிய பாதையை தற்போது பார்ப்போம்.
சுற்றுலா என்பது ஒரு வாகனத்தில் ஏறி ஒரு பகுதிக்கு சென்று அங்குள்ள காட்சிகளை ரசிப்பது மட்டுமில்லை. நாம் மேற்கொள்ளும் பயணத்தின்போது கடந்து செல்லும் மண், மலை, மக்களும் அதற்குள் அடங்கும். இந்த பயணமே உங்களுக்கு பல்வேறு அனுபவங்களை தரும். அந்த வகையில் நீங்கள் ரசித்துக் கொண்டே செல்லக்கூடிய பல்வேறு அழகிய பாதைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பாதைகள், கிழக்கு மற்றும் தெற்கே கிழக்கு கடற்கரை சாலைகள், டெல்டா பகுதிகளில் வயல்வெளிகள் சூழ்ந்த பாதைகள் என வெவ்வேறு நிலப்பரப்புகளை விதவிதமான பாதைகளை உள்ளடக்கியது தமிழ்நாடு. அப்படிப்பட்ட ஒரு பாதையை தான் தற்போது நாம் பார்க்க உள்ளோம்.

சினிமா, சமூக வலைதளங்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் காட்சிகளை பார்த்து நம்மில் பலரும் மெய் சிலிர்த்து இருப்போம். வாழ்வில் ஒருமுறையாவது அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்போம். பனிப்போர்வை சூழ்ந்த சுவிட்சர்லாந்து மட்டுமில்லை, பச்சை புல்வெளிகள், செடிகள், வண்ண வண்ண மலர்கள் பூத்த மரங்கள், ஆங்காங்கே நீர்நிலைகள் என சுவிட்சர்லாந்துக்கு வேறொரு முகமும் உள்ளது.
நாம் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்வது சுவிட்சர்லாந்தின் பச்சை முகத்தை. உடனே ஊட்டி, கொடைக்கானல் என்று நினைத்துவிடார்கள். நாம் செல்ல வேண்டியது சேலத்திற்கு. சேலம் மாவட்டம் ஏற்காட்டின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஏற்கனவே அதுபற்றி ஒரு பதிவை நாம் பார்த்து இருக்கிறோம்.

அந்த பதிவில் ஏற்காட்டில் உள்ள அருமையான சுற்றுலா தளங்கள் பற்றி பார்த்தோம். இதில் ஏற்காடு செல்லும் வழியில் உள்ள அழகிய பாதையைதான் பார்க்க உள்ளோம். அதுதான் லூப் சாலை. 32 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த லூப் சாலையில் திரும்பு திசையெங்கும் உங்கள் கண்களுக்கு ட்ரீட் வைக்கும் அழகிய காட்சிகள் இருக்கும். -

சாலையோரம் பச்சை புல் போர்வையால் சூழப்பட்ட மலைப் பாறைகளை கொண்ட இந்த சாலையில் இன்னும் ஏராளமான விசயங்கள் உள்ளன. நகர பரபரப்புகள், டிராபின் டென்சனை தாண்டி ஏற்காட்டுக்குள் நுழைந்த உங்கள் மனதை இந்த பாதை நிச்சயம் சாந்தப்படுத்தும். உச்சி மழையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் உங்களை வரவேற்கும்.

ஏற்காடு ஏரிக்கு பின் இருந்து தொடங்கும் இந்த 32 கிமீ நீள சாலையை உங்களால் மறக்கவே முடியாது. ஆங்கேயா வண்ண வண்ண மலர்களை கொண்ட மரங்கள், தூய்மையான தாய் சாலைகள் என உங்கள் ரசனைக்கு தீனிபோடும் பல விசயங்களை தனகத்தே கொண்டு உள்ள இந்த சாலை.

வறண்ட பாலைவனத்தில் பயணித்து தாகத்தில் நீரை தேடிய அலையும் நபரின் கண்களில் தூய நீர்நிலை தெரிந்தால் எப்படி மகிழ்வாரோ, அத்தகைய மகிழ்ச்சியை நீங்கள் அடைவீர்கள். ஸ்பெஷல் போனசாக இந்த சாலையை ஒட்டியே சில முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்து இருக்கின்றன. காவிரி சிகரம், கரடியூர் வியூ பாயிண்ட், மஞ்சக்குட்டை வியூ பாயிண்ட் ஆகியவை. இவற்றை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications