காட்டு அருவி குளியல், டிரெக்கிங்.. சென்னையிலிருந்து ஜஸ்ட் 3 மணி நேரம்! உப்பலமடுகு செல்வது எப்படி?
சென்னை: குற்றாலம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சென்னையை சேர்ந்த பலர் குற்றாலம் நோக்கி பல நூறு கிலோ மீட்டர்கள் பயணிக்கும் நிலையில் சென்னைக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு அழகிய அருவி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? வாங்க விரிவாக பார்ப்போம்.
குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. சுட்டெரித்த வெயிலில் வாடி வதங்கிய மக்கள் குற்றாலம் நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிக பொருளாதாரமும், விடுமுறை இருந்தால் குற்றாலத்தில் சென்று வரலாம். ஒரு நாள் வார விடுமுறையை வைத்துக்கொண்டு எங்கு செல்வது என்று ஏங்குவோருக்கு இந்த சுற்றுலா தலம் அறிய வாய்ப்பாக இருக்கும்.

ஆனால், இது தமிழ்நாட்டில் இல்லை. சுந்தர தெலுங்கு பேசும் ஆந்திராவில் இருக்கிறது. அதுதான் உப்பலமடுகு நீர்வீழ்ச்சி. உச்சரிப்பது கொஞ்சம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அப்பகுதிக்கு செல்வது எளிது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில்தான் இந்த அழகிய நீர் வீழ்ச்சி அமைந்து உள்ளது.

தடாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள இந்த நீர்வீழ்ச்சியை தான் தடா அருவி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். நீங்கள் புஷ்பா படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் மலைப் பகுதிகள், இயற்கை காட்சிகளை நேரில் காண வேண்டும் என்றால் இப்பகுதிக்கு நீங்கள் தாராளமாக பயணிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள், கார் போன்றவற்றில் எளிதாக இப்பகுதிக்கு சென்றடையலாம். வரதையாபாளத்தில் இருந்து காட்டுப் பகுதியின் நுழைவு வாயில் வரை வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கும். அதை பார்த்தோ அல்லது கூகுள் மேப் உதவியுடனோ இப்பகுதிக்கு வந்து சேரலாம்.
நகர பரபரப்புகளில் இருந்து விடுபட்டு ஒருநாள் இயற்கையோடு இணைந்திட இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். மலைகளின் அழகிய காட்சியை இப்பகுதியில் கண்டுகளிக்கலாம். பொங்கி வரும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழலாம். நீர் வீழ்ச்சியாக விழும் தண்ணீர் அப்படியே காட்டாறுபோல் ஓடும்.

வனப்பகுதியின் நுழைவாயில் முதல் பேஸ் கேம்ப் வரை பார்க்கிங் பகுதி, கழிப்பிட வசதி, சிறிய உணவகங்கள் போன்றவை உள்ளன. 15 நிமிடம் நடந்த பிறகு தடுப்பணையை அடைவீர்கள். வெறும் 3 அடி ஆழம் கொண்ட அந்த அணையில் நீச்சல் தெரியாதவர்களும் குளித்து மகிழலாம். அதே பகுதியில் சிறிய, பெரிய குளங்களும் ஆங்காங்கே இருக்கும்.

கண்ணாடி போன்ற அந்த நீரில் இறங்கி குளித்து மகிழலாம். அருவில் குளிப்பது மட்டுமின்றி, மலையேற்றத்தின் ஆர்வம் கொண்டவர்களுக்காக செதுக்கியதைபோல் இருக்கும் இப்பகுதி. கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர்கள் தூரம் வரை உங்களால் மலையேற்றம் செய்ய முடியும். மலைப் பகுதிகளின் முழு அழகையும் உங்களால் இங்கு உணர முடியும்.

அதே நேரம் பாறைகள் பாசி படிந்து வழுவழு என்று இருப்பதால் மலையேற்றம் செய்பவர்கள், அதற்கு தகுந்த காலணிகளை அணிந்து வாருங்கள். 2020 ஆம் ஆண்டு விவரப்படி கார்கள் உள்ளே செல்ல 200 ரூபாயையும், பைக்களுக்கு 50 ரூபாயையும், மினி பஸ்ஸுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் தனி நபர்களுக்கு தலா ரூ.20 நுழைவுக் கட்டணம் பெறப்படுகிறது. கேமராக்களை கொண்டு செல்ல தனி கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். தற்போது கட்டண விபரம் சற்று மாறி இருக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications