காரை ஓட்டிக்கொண்டே தோழியுடன் உல்லாசம்.. 144 கிமீ ஸ்பீடு வேற.. ஹைவேயில் அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள்
சென்னை: மணிக்கு 144 கிமீ வேகத்தை காரை அதிவேகமாக ஓட்டியபடி, தோழியுடன் உல்லாசம் அனுபவித்த நபரை கையும் களவுமாக ஹைவேயில் மடக்கி பிடித்துள்ளனர் போலீசார். சினிமாவில் கூட இப்படியெல்லாம் நடக்காதே என திகைக்க வைக்கும் வகையில் இந்த நிகழ்வானது ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வாகன ஓட்டிகள் சிலர் வாகனங்கள் ஓட்டும் போது சாலையில்தான் வாகனம் ஓட்டுகிறோம் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல், சாலை விதிகளை இஷ்டத்திற்கு மீறியபடி செல்வதை பார்த்திருக்க கூடும். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக இத்தகைய நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.

அங்கும் இங்குமாக சென்ற கார்
இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்கவே இப்படி வாகன விதிமீறல்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் சில சம்பவங்கள் வினோதமாக நடைபெறுவதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
ஜெர்மனியில் மிகவும் பிரபலமான ஆட்டோபான் (Autobahn) ஹைவேயில் கார் ஒன்று அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மணிக்கு 144 கிலோமீட்டர் வேகம் (90 மைல்கள்) வேகத்தில் கார் சீறிப்பாய்ந்தது. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த இந்த கார் அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடி பிற வாகனங்களுக்கு இடையூறாக சென்றது.
தோழியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டே
டோர்ட்முண்ட் நோக்கி சென்ற ஃபோர்டு காரில் ஒரு 37 வயது ஆண் ஒருவரும் அவரது தோழியான 33 வயதான பெண் ஒருவரும் பயணித்துள்ளனர். கார் தாறுமாறாக ஓடியதை பார்த்த பயணிகள் சிலர் காரை பின்தொடர்ந்துள்ளனர். அப்போது, காருக்குள் இருவரும் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதிவேகத்தில் வாகனம் ஓட்டிக்கொண்டு செய்யும் காரியமா? என அதிர்ந்த வாகன ஓட்டிகள் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, காரை சர்வீஸ் லேனில் மடக்கி பிடிக்க போலீசார் உஷாராகினர். கார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் தடுத்து நிறுத்திய போலீசார், காரை அஜாக்கிரதையாக ஓட்டிய நபரை கைது செய்தனர்.
5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அந்த நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஜெர்மன் அதிகாரிகள் கூறுகையில், சாலையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட வாகன ஓட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெர்மன் தண்டனைச் சட்டம் 315B-ன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தண்டனை நிச்சயம் கிடைக்கும்" என்றனர். ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் ஹைவே என்பது உலக அளவில் மிகவும் பிரபலமான சாலையாகும். இது ஒரே நேர்கோட்டில் மிகவும் நீளமான சாலையாக உள்ளது.
முதல் முறை அல்ல
இந்த சாலையில் செல்ல வரையறுக்கப்பட்ட வேகம் எதுவும் கிடையாது. எனினும், சாலை முழுக்க அப்படி பயணிக்க முடியாது. சில இடங்களில் குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். அதிக ஆபத்து நிறைந்த பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள் என அந்த சாலையில் 30 சதவீத இடங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
ஆட்டோபான் சாலையில் இப்படியான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதம் ஒரு வாகன ஓட்டி அனுமதிக்கப்பட்ட அளவான 124 மைல் வேகத்திற்கு பதிலாக 200 மைல் (321.87 கி.மீ) வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்சென்று பிடிபட்டார். அந்த டிரைவரை பிடித்த போலீசார் €900 (இந்திய மதிப்பில் ரூ. 92,000) அபராதம் விதித்தனர். மூன்று மாதம் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications