எம்ஜிஆரை புகழ்ந்த அண்ணாமலை.. இரட்டை இலைக்கு செக் வைத்த பாஜக? கூட்டணி வைக்க அதிமுகவிற்கு நெருக்கடி?
சென்னை: அதிமுக நிறுவனர் எம் ஜி ராமசந்திரரை பாஜக தலைவர் அண்ணாமலை புகழ்ந்த சம்பவம் புதிய அரசியல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எங்கே அதிமுகவிடம் கூட்டணி வைக்க பாஜக பிளான் போடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இரட்டை இலை தொடர்பான வழக்கு சூடு பிடித்துள்ளது.. இப்படிப்பட்ட நிலையில் கூட்டணிக்கு அதிமுகவை பாஜக கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்ஜிஆரின் 37வது நினைவு நாளையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் எம்.ஜி.ஆர் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர்.

பாஜக அண்ணாமலை எம்ஜிஆர்: வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்ட நேரடி நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நிர்வாகம், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியது. ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. தமது ஆட்சியில், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிட்டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும் பிரதமர் மோடி தான். எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
எம்.ஜி.ஆருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து தங்கள் கடின உழைப்பாலும் மக்கள் மீது கொண்ட அன்பாலும் உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை, ஒரு சகாப்தம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி பிளான்:
ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி பற்றி சில மூத்த தலைவர்கள் அமித் ஷாவிடம் பேசி உள்ளார்களாம். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி ஏன் முக்கியம். திமுகவை எதிர்க்க ஏன் இந்த கூட்டணி அவசியம் என்றும் பேசி உள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர், விஜய், அதிமுக, பாஜக என்று திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. அப்படி சிதறினால் திமுகவை வீழ்த்தவே முடியாது. மனஸ்தாபங்களை களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் அமித் ஷாவிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி ஆலோசிக்கலாம் என்று அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளாராம்.
அதன்படி அதிமுக தலைவர்கள் பற்றி தவறாக பேச வேண்டாம்.. மேடைகளில், செய்தியாளர் சந்திப்புகளில் தவறாக பேச வேண்டாம். அப்படி பேசினால் சிக்கல் ஆளும். 2025ம் ஆண்டே கூட்டணியை இறுதி செய்ய வேண்டும். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கூட்டணி வலிமையாக இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணி உருவாக்கவில்லை. பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை. இப்படி இருந்தால் வலிமையான திமுகவை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று அமித் ஷாவே கேட்டதாக கூறப்படுகிறது.
நெருக்கடி:
ஏற்கனவே அதிமுகவின் இரட்டை இலைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்போது எடப்பாடி பாஜகவோடு நெருக்கமாக இருந்தார். இப்போது இல்லை. இனி இவர்கள் சேர்வார்களா இல்லையா என்று தெரியவில்லை.
விஜய் உடன் எடப்பாடி சேர்ந்தால் அங்கே பாஜக வர வாய்ப்பு இல்லை. இதனால் எடப்பாடிக்கு கால் கட்டு போட பாஜக இரட்டை இலை சின்னத்தில் கை வைக்கலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக செக் வைக்கலாம். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எளிதாக முடிய வேண்டிய விஷயம்.. முடிந்துவிட்டது என்று நினைத்த விஷயம் மீண்டும் பெரிதாகி உள்ளது.
சின்னம் வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணி வையுங்கள் என்று பாஜக அதிமுகவிற்கு நெருக்கடி தர தொடங்கி உள்ளதோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications