விஜய்யின் முதல்வர் பதவி திருமா கையில்.. தவெகவிற்கு ஆதரவா? மாலை 4 மணிக்கு விசிக அறிவிப்பு.. திக்திக்
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மெஜாரிட்டி கிடைக்காமல் தவித்து வருகிறார். மெஜாரிட்டிக்கு இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இந்நிலையில் தான் 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளார். தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விஜய், திருமாவளவனிடம் கேட்டு கொண்ட நிலையில் அவர் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து எடுத்த முடிவை மாலை 4 மணியளவில் அறிவிக்கிறார்.
நேற்று மாலை 5 மணியளவில் திருமாவளவன் தனது கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் ஆன்லைனில் நடந்தது. அப்போது விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதுபற்றி விவாதம் நடத்தி திருமாவளவன் விஜய்யின் தவெகவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் அந்த முடிவை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த முடிவை இன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமாவளவனின் அறிவிப்பு மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனென்றால் தமிழக சட்டசபையில் மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும்.
ஆனால் விஜய்யின் தவெகவிடம் 107 (விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளதால் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது) எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் ஆதரவு தெரிவித்துள்னளர். இதனால் தவெக வசம் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
திருமாவளவனின் விசிகவிடம் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் விஜய்யால் எளிதாக மெஜாரிட்டி மார்க் 118யை எட்டி ஆட்சியை பிடித்து முதல்வராக முடியும். இதனால் திருமாவளவனின் இன்றைய அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மாலை 4 மணிக்கு திருமாவளவன் அறிவிக்கப்பார் என்று விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications