அழகுக்குள் ஆபத்து! புல்லரிக்க வைக்கும் புல்லாவெளி ஃபால்ஸ்! கோடைக்கு இதமாய் குளிக்க முடியாது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட மணலூர் புல்லாவெளி பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த அழகான நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு குளிக்க செல்லாமல் பார்ப்பதற்கு மட்டுமே செல்ல வேண்டும். மலைப்பகுதியில் உள்ள ஆபத்து மிகுந்த புல்லாவெளி அருவியில் இதுவரை 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது வழியில் அழகான மலைப்பகுதியின் ஈரப்பதமான காற்று, மூலிகையுடன் கலந்த இயற்கை நறுமணம், பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடிகள் உள்ளன.

மேலும் தேக்கு மரம் சவுக்கு மரம், பலா மரம், பலாமரத்தில் ஏற்றி விடப்படும் மிளகு கொடிகள், உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண் குளிர காணலாம்.
புல்லாவெளி நீர்வீழ்ச்சி: மேலும் அவ்வப்பொழுது காட்டு யானை, காட்டு அணில், மந்தி குரங்குகள் , உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் நமது கண்களில் தென்பட மிகுதியான வாய்ப்புள்ளது. மேலும் வத்தலகுண்டு அய்யம்பாளம் வழியாக சித்தூரில் இருந்து துவங்கப்படும் மலைப்பாதையில் பயணம் செய்யும்போது மலை உச்சியிலிருந்து பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்கு, நெளிவு சுழிவான வளைவுகள், உள்ளிட்டவை கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
தொங்கு பாலம்: மேலும் இந்த புள்ள வழி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்து வந்துள்ளது. மேலும் நிலக்கோட்டை வத்தலகுண்டு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு, கிழமைகளில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வந்து நீராடி மகிழ்வதுடன் இயற்கையை ரசித்து வந்தனர்.

அழகும் ஆபத்தும்: அழகு இருந்தால் ஆபத்து இருக்கும் என்று பழமொழி உண்டு அதற்கு ஏற்றவாறு, இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஒரு பகுதியில் பயங்கர பள்ளத்தாக்கு பகுதியும் உள்ளது. அதேபோல் இளம் கன்று பயம் அறியாது என்று கூறுவது போல , அப்பகுதிக்கு இன்பச் சுற்றுலா வரும் இளைஞர்கள் அந்தப் பயங்கர பள்ளத்தாக்கு பகுதி பார்வையிட துணிந்து சென்று உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஏராளம் என கூறுகின்றனர். இருந்தாலும் இந்த விழா வழி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஒரு சிலர் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
14 பேர் பலி: எனவே இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியை அரசாங்கம் நல்ல முறையில் பல்வேறு பாதுகாப்பான ஏற்பாட்டுடன் சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள ஆபத்து மிகுந்த புல்லாவெளி அருவியில் இதுவரை 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
கவனம் அவசியம்: இவர்களில் 13 பேரின் உடல்களை மீட்டுள்ள தீயணைப்புத் துறையினர் இருவர் உடலை மீட்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. புல்லாவெளி அருவியில் 500 அடி பள்ளத்தில் தண்ணீர் விழுகிறது. இதை அருவியின் மேற்பரப்பில் இருந்து காணமுடியும். அருவியை கண்டு ரசிக்கமுடியுமே தவிர குளிக்கமுடியாது. அருவியின் மேற்பரப்பு பாறையாக உள்ளதால் அருவியில் விழும் தண்ணீர் தெறித்து விழுந்து வழுக்கு பாறையாக மாறியுள்ளது. இதை அறியாமல் பாறையில் இறங்கி அருவியை நெருங்கிச்சென்று புகைப்படம் எடுக்கும் போது தான் ஆபத்தை சந்திக்கின்றனர். எனவே அருவியை பார்க்க மட்டுமே செல்ல வேண்டும் குளிக்க சென்று ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும்..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications