மூலிகைகள் நிறைந்த வேட்டைக்காரன் மலை! கொல்லிமலைக்கு அருகே இப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா? டோன்ட் மிஸ்
சென்னை: கொல்லிமலையிலிருந்து 12 கி,மீ, தூரத்தில் நம்ம அருவி என்ற ஒன்று கொல்லிமலைக்கே அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலம் கொல்லிமலை. இந்த மலையில் ஏராளமான அபூர்வ மூலிகை செடிகளும் அருவிகளும் உள்ளன. இங்கு அகத்தியர், திருமூலர், போகர் உள்ளிட்ட 18 சித்தர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு அடையாளமாக நிறைய குகைகள் உள்ளன.

கொல்லிமலை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டதாக சொல்லப்படுகிறது. இங்கு ஆகாயகங்கை நீர் வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆன்மீக ரீதியாகவும் புத்துணர்ச்சியை பெறுவதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
அந்த வகையில் நம்ம அருவியில் தண்ணீரானது ஆர்ப்பரிப்பில்லாமல் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள். நாமக்கலில் இருந்து கொல்லிமலை வந்து ஆட்டோ பிடித்து நம்ம அருவிக்கு வரலாம். பைக்கில் வரும் போது கொல்லிமலை ஹேர்பின் வளைவுகளை பார்த்தபடியே வரலாம்.
நம்ம அருவி, கொல்லிமலை
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) January 5, 2024
அதிகம் அறியப்படாத நம்ம அருவி. அறப்பளீஸ்வரர் கோவில் போற வழியில் கொல்லிமலையில் இருந்து சரியாக 12 கி.மீ தூரத்தில் இந்த நம்ம அருவி அமைந்துள்ளது. ரம்மியமாக கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும் வகையில், கொல்லிமலைக்கே மேலும் அழகு சேர்க்கிறது இந்த நம்ம அருவி.இந்த… pic.twitter.com/oQ3Ws8rrXb
இப்படிப்பட்ட அருவி குறித்து Film Food Fun & Fact என்ற ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நம்ம அருவி, கொல்லிமலை. அதிகம் அறியப்படாத நம்ம அருவி. அறப்பளீஸ்வரர் கோவில் போற வழியில் கொல்லிமலையில் இருந்து சரியாக 12 கி.மீ தூரத்தில் இந்த நம்ம அருவி அமைந்துள்ளது. ரம்மியமாக கண்களுக்கு இதமாக காட்சியளிக்கும் வகையில், கொல்லிமலைக்கே மேலும் அழகு சேர்க்கிறது இந்த நம்ம அருவி.
இந்த அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளித்துவிட்டு வருபவர்கள் உடைகளை மாற்ற தனியாக உடை மாற்றிக்கொள்ளும் அறையும், வாகனங்கள் நிறுத்தவும் இங்கு வசதிகளும் இங்கு உள்ளது.
நம்ம அருவியின் அருகில் சுற்றுலாப் பயணிகள் சென்று தண்ணீரில் நனைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருக்கு. ஆகாயகங்கை, மாசிலா அருவி போல இந்த நம்ம அருவியும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையை எப்போதும் ரசிப்போம். கொல்லிமலையில் சித்தர்கள் வாழ்ந்த இடம் என்பதால் இங்கிருந்து ஏராளமான மூலிகை பொடிகள், தைலங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications