'நானும் மதுரைக்காரன்டா'.. கொடைக்கானல் ஏரியில் அலம்பல்.. போலீஸ் ட்ரீட்மெண்ட்டுக்கு பின் அழுது ஆக்டிங்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருவது வழக்கம். அப்படித்தான் மதுரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அவர் கொடைக்கானலில் உள்ள மதுக்கடையில் அதிகப்படியாக மது அருந்துவிட்டு அலப்பறை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நட்சத்திர ஏரியில் குதித்துள்ளார். காப்பாற்ற வந்தவர்களிடம் அவர் கொடுத்த அலப்பறை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் புகழ் பெற்ற மலைவாசல் தலங்களில் முக்கியமான கொடைக்கானல்.. இந்த சுற்றுலா தலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற கொடைக்கானலில் கிளைமேட் ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருக்கும். இங்கு சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் ஏராளமான இடங்கள் உள்ளன.

நட்சத்திர ஏரி, குணா குகை, பில்லர் ராக்ஸ், பிரயண்ட் பூங்கா ரோஜா பூங்கா, செட்டியார் பார்க், குறிஞ்சி ஆண்டர் கோவில், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், கூக்கால் ஏரி, பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், வெள்ளிநீர் வீழ்ச்சி, மாதா கோவில், சவுக்கு தோப்புகள், பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி உள்பட இன்னும் பல இடங்கள் உள்ளன. இதேபோல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் டிரக்கிங், கேம் பயர், நட்சத்திர சுற்றுலா விடுதிகள், சொகுசு வசதிகளுடன் கூடிய காட்டேஜ்கள் உள்பட பல்வேறு விஷயங்களும் இருக்கின்றன. இதனால் விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் கூட்டம் அலைமோதும். புதிதாக திருமணம் ஆன ஜோடிகளுக்கு கொடைக்கானல் மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. இதனால் ஆண்டு முழுவதுமே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நட்சத்திர ஏரிக்கு போகாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஏரி அற்புதமாக இருக்கும். இதனால் எந்த ஏரியில் எப்போதுமே சுற்றுலா பயணிகள் அதிகம் இருப்பார்கள். இந்தநிலையில் நேற்று நட்சத்திர ஏரியில், வாலிபர் ஒருவர் திடீரென கடும் குளிரை பொருட்படுத்தாமல் குதித்து நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் அவரை வெளியே வருமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து வெளியே வந்த வாலிபர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்த மக்களிடம் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு சண்டைக்கு போனார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர், நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சல் அடித்ததாக கூறியிருக்கிறார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக நட்சத்திர ஏரியில் போதையில் குளித்து ரகளையில் ஈடுபட்ட அந்த நபர், காப்பாற்ற வந்தவர்களை பார்த்து நானும் "மதுரைக்காரன்டா" என துள்ளிக்கொண்டு நின்றுள்ளார். ஒரு கட்டத்தில் போதை தெளிந்த உடன், ஊருக்கு கிளம்புமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது உடனே அழுது ஆக்டிங் செய்த நபருக்கு போலீசார் அறிவுரை கூறியதுடன், குளிரில் நடுங்கிய போதை இளைஞருக்கு டீ வாங்கிக்கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications