தீபாவளிக்கு டூர் போக போறீங்களா.. ஊட்டி கொடைக்கானல் மாதிரி இருக்கனும்.. காசும் செலவாகக்கூடாதா?
தேனி: தீபாவளிக்கு டூர் போக போறீங்களா.. கொடைக்கானல், ஊட்டி மாதிரி இருக்கனும்.. காசும் செலவாகக்கூடாது என்று நினைக்கிறீர்களா.. அப்படியான இடங்கள் உள்ளன.. அந்த இடங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
எல்லாருக்கும் தீபாவளி சமயத்தில் சுற்றுலா செல்ல ஆசை இருக்கும். தீபாவளி நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் போனால் காரை பார்க்கிங் செய்வதற்கு கூட சில சமயம் கடினமாக இருக்கும்.. அண்மையில ஆயுத பூஜை சமயத்தில் சுற்றுலா சென்றவர்களின் கூட்டம் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு இருந்தது.. ஹோட்டல் மற்றும் விடுதிகளில் இடம் இல்லாமல், சுதந்திரமாக சுற்றி பார்க்கவும் முடியாமல் அவதிப்படும் நிலை முக்கிய நாட்களில் ஏற்படுகிறது.

அதேநேரம் விடுமுறை காலங்களில் ஊட்டி கொடைக்கானல் மாதிரியான சுற்றுலா தங்களில் தங்குவதற்கு அதிகமான பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.. அதற்கு மாற்றாக அதேநேரம் செலவு ஆக சுற்றுலா தளங்களை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம்.
தேனி மாவட்டத்தில் இரண்டு இடங்கள் உள்ளன. ஒரு இடம் மேகமலை.. இங்கு சுற்றிபார்க்க எந்த கட்டணமும் இல்லை. ஆனால் தங்கி சுற்றி பார்க்க இரண்டு தங்கும் விடுதிகள் தான் உள்ளன. பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள். ரம்மியான அருவிகள், சிறப்பான கிளைமேட்.. மனிதர்கள் அதிகம் கால் பாதிக்காத பல பகுதிகள், வனவிலங்குகள், இயற்கை இயற்கையாகவே இருக்கும் பகுதிகள் என உங்களை அசரடித்துவிடும்.
மேகமலையில் ஹோட்டலும் பெரிதாக இல்லை. இரண்டு அல்லது மூன்று ஹோட்டல்கள் தான் உள்ளது. தேனி அல்லது சின்னமனூரில் தான் வேண்டிய பொருட்களை வாங்க வேண்டும். தேனியில் தங்கி இருந்து சுற்றி பார்க்கலாம். சின்னமனூரிலும் தங்கலாம். ஊட்டி கொடைக்கானல் மாதிரி விடுதிக்காக நிறைய கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. மேகமலையில் முக்கியமான ஒரு விஷயம் அங்கு மதுபானக் கடை எதுவும் இல்லை. அதனால் மது அருந்துவோர்களால் பெரிய பிரச்சனை வராது.
மேகமலையை பார்த்துவிட்டு வந்தால், அதன் கீழே சுருளி அருவியை ரசிக்கலாம். சுருளி அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கு குளித்து மகிழலாம்.. அப்படியே நேராக கேரளாவின் தேக்கடி சென்று அங்கு படகு சவாரி, யானை சவாரி போன்றவை மேற்கொள்ளலாம். இதேபோல் விருப்பம் இருந்தால் அப்படியே அங்கிருந்து கொஞ்ச தூரத்திலேயே உள்ள வாகமனுக்கும் சென்றுவரலாம்.. வாகமன் அற்புதமான இடம்.. அங்கு ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.. விடுதிகளும் ஏராளமான உள்ளன.

இதேபோல் தேனி மாவட்டத்தில் இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு உள்ள மற்றொரு அழகான இடம் கொழுக்குமலை டீ எஸ்டேட்.. இங்கு செல்ல போடியில் போடி மெட்டு சென்று அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரியா நெல்லிக்கு ஜீப்பில் செல்ல வேண்டும். அங்கிருந்து இன்னொரு ஜீப்பில் சென்றால் கொழுக்கு மலை போய்விடலாம்.. இந்த இடத்தில் தங்க வேண்டும் என்றால் ஏற்கனவே முன்பதிவு செய்ய வேண்டும்.. எனவே முன்பதிவு செய்து தங்கி கொள்ளலாம். கொழுக்குமலை கடல் மட்டத்தில் இருந்துது சுமார் 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
உலகிலேயே மிக உயரமான தேயிலை எஸ்டேட் என்று கொழுக்குமலை போற்றப்படுகிறது. இயற்கையின் மிக அழகிய காட்சிகள் உங்களை நெகிழ வைத்துவிடும்.. இந்த கொழுக்குமலை எஸ்டேட் மூணாறிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலை பாரம்பரிய முறைபடியே செய்யப்படுகிறது.. இங்கு விற்கப்படும் டீ சுவை வேறு எங்குமே காண முடியாத ஒன்று ஆகும். கொழுக்குமலையின் அழகான காட்சியை, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது கட்டாயமாக பார்க்க வேண்டும். சாகச விரும்பிகளுக்கு கொழுக்குமலை அற்புதமான இடம் ஆகும்.












Click it and Unblock the Notifications